பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில டிப்ஸ்

கற்றாழை சாற்றை தலையில்_மேர்புற தோலில்தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்துகுளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

பச்சை பயிறுமாவு மற்றும் தயிர் கலந்து தலையில்தேய்த்து பின்புகுளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

ஹீனா மற்றும் தயிரையும் கலந்து தலையில் தேய்த்து பின்பு குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

கூந்தல் உதிருவதற்கான பல்வேறு_காரணங்களுள் ஒன்று, பொடுகு. சிலருக்கு பொடுகு காரணமாக_தலையில் அரிப்பு போன்றவை_ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையால் அவதிப்படுபவரா நீங்கள்? இதோ உங்களுக்காக, சிலடிப்ஸ்…

*மிளகுதூளுடன் பால் சேர்த்து தலையில்தேய்த்து சில நிமிடங்கள் ஊறியபின் குளித்தால், "பொடுகு தொல்லை நீங்கும்".

*வெந்தயத்தை தலைக்குதேய்த்து குளித்தால், உடல்உஷ்ணம் குறைவதுடன் பொடுகுதொல்லை நீங்கும்.

*தலையில் சிறிதளவு தயிர்தேய்த்து சிலநிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய்_தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்.

*வேப்பிலை கொழுந்து துளசி ஆகியவற்றை_நைசாக அரைத்து தலையில்தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளித்தால் பொடுகுதொல்லை நீங்கும்.

*வசம்பை நன்குபவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, அந்த எண்ணெயை தலையில்தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துபோகும்.

* எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய்எண்ணெய் கலந்து தலையில்தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம்பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சைபயிறு மாவு கலந்து தலையில்தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்புபோட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.

*தலைக்கு குளிக்கும்போது, கடைசியாக குளிக்கும் தண்ணீரில், வினிகர்கலந்து குளித்தால், பொடுகுநீங்கும்.

*நெல்லிக்காய் தூள், வெந்தயப்பொடி, தயிர் மற்றும் கடலைமாவுகலந்து தலையில்தேய்த்து, சிறிதுநேரம் கழித்து குளிக்கவேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவர பொடுகு நீங்கும்.

*வாரம் ஒருமுறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தலையில்தேய்த்தால், பொடுகுதொல்லை நீங்கும்.

*தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தைசேர்த்து காய்ச்சி, தலையில்தேய்த்து வந்தால், பொடுகுபிரச்னை நீங்கும்.

*தேங்காய்பால் எடுத்தபின் கையை தலையில் நன்றாகதேய்த்து, சிறிதுநேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு மறைந்துவிடும்.

*முதல்நாள் சாதம்வடித்த தண்ணீரை எடுத்துவைத்து, மறுநாள் அதை தலையில்தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும்.

* முட்டை தயிர், எலுமிச்சைசாறு கலந்து தலையில்தேய்த்துக் குளிக்க பொடுகுமறையும்.

*துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.

dandruff,tamil,treatment,சில டிப்ஸ்,திர்க,நீங்கும்,பிரச்னையை,பொடுகு,பொடுகு தொல்லை,பொடுகு தொல்லை நீங்க,பொடுகு நீங்க,பொடுகு பிரச்னை நீங்கும்,பொடுகு மறைந்து போக

2 responses to “பொடுகு நீங்க”

  1. பயனுள்ளதாக உள்ளது. பொடுகை போக்கும் வழிகள் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...