வாசனைத் திரவியங்கள்

 பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே வாசனைத் திரவியங்களை அளவோடும், பொருத்தமான இடங்களிலும் பயன்படுத்தினால் மருத்துவப் பயன் உள்ளது.

பசியைத் தூண்டும் குணம், செரிமானத்திற்கு உதவும் தன்மை, கிருமிகள் எதிர்ப்பு என இந்தப் பொருட்கள் உதவக் கூடியவை.

இந்த வகையில் பெருங்காயம், மிக முழுமையான தாது உப்புகள், கால்சியம், இரும்புச் சத்துக்களை கொண்டுள்ளது. உணவில் ஒரு துளி பெருங்காயம் சேர்த்தால் ஆஷ்துமா, நெஞ்சுச் சளி நோய், அஜீரணம், வயிற்றுவலி, வயிற்றில் பூச்சித் தொல்லை என்ற பல கோளாறுகளை இது போக்கும்.

சீரகமும் இதேபோலத்தான். இரும்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், சோடியம், வைட்டமின் 'ஏ' மற்றும் வைட்டமின் 'பி' அடங்கியுள்ளது. வயிற்றுக் கடுப்பு, வயிற்று போக்கு, கால ஒழுங்கற்ற மாதவிலக்குக் கோளாறு, இவற்றை நீக்குகிறது. செரிமானத்திற்கு உதவுகிறது. கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

மல்லி, செரிமானத்திற்கு உதவும் திரவியம். உடல் சூட்டை நன்கு தணிக்கிறது. காய்கறிகள் வேகவைக்கும்போது, பொரிக்கும்போது மஞ்சள் தூவுவது நமது நாட்டில் பழக்கம். இது உள் காயங்களை ஆற்றும். பிசகிய தசை வழிகளுக்கு நிவாரணி. கிருமி நாசினி. புற்றுநோயை எதிர்க்கிறது.

தேங்காய்ப்பாலில் மிக அதிக தாது உப்புகள் உள்ளன. நார்ச் சத்துடன் நல்ல மலமிளக்கியாகவும் உள்ளது.

குறுமிளகு செரிமானத்திற்கு ஏற்றது. பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கரோடின், மண்ணீரல் சிறுநீர்க் குழாய்களில் கிருமித் தொற்றைப் போக்கும். மனமும் நிறமும் உணவுக்கு கவர்ச்சித் தன்மையைத் தரும். 'ருமேட்டிசிசம்' நோய்களுக்கு நன்றாக குணமளிக்கும்.

இலவங்கப்பட்டையும் வாசனை, ருசிகூட்டும். செரிமானத்திற்கு உதவும். சளியை போக்கும். கிராம்பு பல்வலி தீர, வாய்ச்சுத்ததிற்கு, உணவு கெடாமல் பாதுகாக்க என்று பயன்படுகிறது.

 

இலவங்கப்பட்டை மூலம் சுக்கில நஷ்டத்தைப் போக்கலாம். ஆஷ்துமா நோயைக் குணப்படுத்தும் ஆற்றலையும் இது பெற்றுள்ளது. சிலந்தி விஷம், பாம்புகளின் விஷம் இவைகளை முறியடிக்கவும் இது நல்ல மருந்தாகிறது.

 

இலவங்கப்பட்டையை வறுத்து இடித்துச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு வேளைக்குப் பத்து குன்றிமணி அளவு உட்கொண்டு வந்தால் மூளை, இருதயம் போன்ற உறுப்புகளுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். மேலும் உடல் நடுக்கம், கண் அடிக்கடித் துடித்தல் போன்றவை குணமாகும்.

 

பெண்களைப் பொறுத்தவரை மாதவிலக்குக் காலத்தில் தடைப்படுகின்ற உதிரத்தை விரைவில் வெளியேற்ற இந்தப் பட்டைத்தூள் பெரிதும் துணையாகிறது. வயிற்றில் கடுமையான வலி ஏற்படாமலும் பாதுகாத்துக் கொள்ளும் தன்மை கொண்டது.

 

இலவங்கப்பட்டையிலிருந்து தயாரிக்கும் சூரணத்தைப் பல்பொடியில் கலந்து பல் விளக்கி வந்தால் வாய் நாற்றம், பற்களின் கூச்சம் இவை குணமாகும். தாய்ப்பாலில் இதைக் கலந்து கண்களின் புருவத்தில் தடவி வந்தால் நல்ல பார்வையை உண்டு பண்ணும்.

 

வயிற்றிலுள்ள வாயுவைக் கண்டிக்கும் நல்ல மருந்தாகவும் இது திகழ்கிறது.

 

வாத சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. சன்னி, பைத்தியம் போன்ற நோய்களையும் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.

 

 

இஞ்சி உணவாகவும், மருந்தாகவும் முழுமையாச் செயல்படுகிறது. செரிமானம், ரத்த ஓட்டம் சீராக, வீக்கம் குறைய, வாயுத் தொல்லை விலக, புற்றுநோய் தடுக்க எனப் பலவழிகளில் உதவுகிறது.

 

பூண்டு குடல் புற்றுநோய், மூளைப்புற்று வராமல் தடுக்கிறது. மூளைப்புற்று அல்லது புற்றுக்கட்டிகளில் செல்கள் மேலும் பெருகாமல் தடுக்கிறது.

கடுகு எண்ணெய் தசைவலிகலைப் போக்கும். வயிற்றில் பூச்சிகளினால் கிருமித்தொற்று நேராமல் காக்கும். உணவில் நச்சுத் தன்மையைக் களைகிறது. உணவுப் பக்குவப் பராமரிப்பாகவும், பொலிவைக் கூட்டுவதாக உடலுக்கும் பயன்படுகிறது.

புதினா இலை பசியை நன்றாகத் தூண்டும். செரிமானத்துக்கு உதவும். மிக முக்கியமாக வலிப்பு நோயாளிகள் அதிகம் உண்ண வேண்டிய ஒன்று.

தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு கசகசா நல்ல மருந்து. உணவுக்கு மணம் சுவை கூட்டும். வெப்பத் தாக்குதலினின்றும் காக்கக் கூடியது.

இதை அளவாக தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தினால் மருத்துவப் பலன்களை முழுமையாகப் பெறலாம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள ...

தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் 'பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதி' எனப்படும், விவசாயிகளுக்கு ...

ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந ...

ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் -அமித் ஷா உறுதி ஜம்மு, ''சட்டசபை தேர்தலுக்குப் பின், ஜம்மு - காஷ்மீருக்கு ...

எழுத்தறிவு தின கொண்டாட்டங்களி ...

எழுத்தறிவு தின கொண்டாட்டங்களில் ஜக்தீப் தன்கர் பங்கேற்பு நமது வாழ்வில்குறைந்தபட்சம் ஒருவரையாவது எழுத்தறிவு பெற்றவராக மாற்ற ஒவ்வொருவரும் ...

புதிய கல்விக்கொள்கை சிறந்த மாற ...

புதிய கல்விக்கொள்கை சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் -குடியரசுத்துணைத்தலைவர் நமது வாழ்வில் குறைந்தபட்சம் ஒருவரையாவது எழுத்தறிவு பெற்றவராக மாற்ற ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளி ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளித்த கோவிலை மீண்டும் கட்டுவோம்-அமித்ஷா உறுதி ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வின் தேர்தல் ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பக ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...