தடையற்ற சேவை ஒருங்கிணைப்பை ஆப்ரேஷன் சிந்தூர் – ராஜ்நாத் சிங்

“இந்தியாவின் பல அடுக்கு கடல்சார் பாதுகாப்பு அமைப்பிற்குள் தடையற்ற சேவை ஒருங்கிணைப்பை ஆபரேஷன் சிந்தூர் வெளிப்படுத்தியதுடன், இந்திய கடலோரக் காவல்படையின் முன்னணிப் பங்கை மீண்டும் உறுதிப்படுத்தியது,” என்று 2026 பிப்ரவரி 01 அன்று புதுதில்லியில் நடந்த இந்தியக் கடலோரக் காவல்படையின் 50-வது நிறுவன தினக் கொண்டாட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறினார்.

தேசிய பாதுகாப்பின் வலுவான தூண்களில் ஒன்றாக இந்தியக் கடலோரக் காவல் படையைக் குறிப்பிட்ட திரு ராஜ்நாத் சிங், இது மேம்பட்ட கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், நவீன விமானங்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்பங்களைக் கொண்ட ஒரு பிரமாண்டமான, நவீனமான சக்திவாய்ந்த படையாக மாற்றப்பட்டுள்ளது என்றார். “நாட்டிற்கு கடலோரக் காவல் படை ஆற்றும் சேவை, இந்தியா தனது கடல்சார் நலன்களைப் பற்றி நம்பிக்கையுடன் பேசுவதற்கும், கடல்சார் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் கடலோர மேம்பாட்டிற்கான திட்டங்களைத் தெளிவுடன் வகுப்பதற்கும் முக்கிய காரணம் என்று நாடு பெருமிதம் கொள்கிறது,” என அவர் கூறினார்.

தேச பாதுகாப்பு எப்போதும் அரசுக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய திரு ராஜ்நாத் சிங், இந்த படைப் பிரிவின் முயற்சிகளுக்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் முழு ஆதரவையும் வழங்கினார். இதனை இன்னும் திறமையானதாகவும், நவீனமாகவும், பயனுள்ளதாகவும் மாற்றுவதற்கான உறுதியை அவர் வெளிப்படுத்தினார். “கடலோரக் காவல் படை வலுவாக இருக்கும்போது மட்டுமே இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். நமது கடல்சார் எல்லைகள் பாதுகாப்பாக இருக்கும்போது, ​​பிராந்திய மட்டத்தில் மட்டுமல்ல, உலக அரங்கிலும் இந்தியா சிறப்பாக செயல்பட முடியும், ”என்று அவர் மேலும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், கடலோரக் காவல் படையின் 50 ஆண்டுகால அசைக்க முடியாத விழிப்புணர்வு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான சேவையை குறிக்கும் வகையில், பொன்விழா ஆண்டு இலச்சினையை பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டார். இந்தியாவின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதில் இப்படையின் வளமான மரபு மற்றும் முக்கிய பங்கை கவுரவிக்கும் வகையில், 50 ஆண்டுகால நினைவு அஞ்சல் தலையையும் அவர் வெளியிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...