முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான புல் வெளிகளிலும் புல்லோடு புல்லாகப் படர்ந்திருக்கும். மஞ்சள் நிறம் கொண்ட பூக்களுடனும், நட்சத்திர வடிவம் கொண்ட காய்களுடனும் இது காணப்படும்.
உடல் உஷ்ணத்தைத் தனித்துக் குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டதாகும். களைப்பை போக்குவதுடன் உடம்பில் தேங்கும் கெட்ட நீரினை வெளியேற்றும் தன்மை இதற்கு மிகவுண்டு. நம்முடலில் சேரும் அதிகப்படியான அமிலச்சத்துகளை வெளியேற்றுவதில் நெருஞ்சி பெருந்துணை புரிகிறது.
சிறுநீரகம் சம்பந்தமாக ஏற்படும் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
நெருஞ்சில் செடியின் வேர், இலை அனைத்தையும் சுத்தமாக கழுவிட்டு கல்லுரலில் இட்டு நன்கு இடித்துச் சாரெடுத்துப் பருகி வந்தால் சிறுநீரகம் சம்பந்தமான அனைத்து நோய்களையும் குணப்படுத்தி விடலாம்.
நெருஞ்சில் செடியை வேருடன் எடுத்து வந்து சுத்தம் செய்து இடித்து நன்கு பிழிந்து ஒரு அவுன்ஸ் வீதம் தினசரி இரண்டு வேளை, மோர் அல்லது பாலுடன் கலந்து ஒரு வாரம் உட்கொண்டால் சிறுநீருடன் இரத்தம் கலந்து போவது குணமாகும்.
சிறுநெருஞ்சில் இலைகளை நெல்லிக்காயளவு அரைத்துக் காலை வேளையில் உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால், மூளையும் நரம்பு மண்டலமும் மற்றும் எல்லா ஹார்மோன்களும் தூண்டிவிடப்பட்டுச் சுரக்கச் செய்யும்.
நெருஞ்சில் நன்கு செயல் புரியும் மூலிகையாகும். நல்ல பசியைக் கொடுக்கும் சக்தி வாய்ந்தது. அமில உற்பத்தி, தானே சமனப்படும்.
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.