தொரிய அணுமின் நிலையம்

இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ஈடாக மற்றொரு செய்தியும் பேசு பொருளாகி வருகிறது. அது, இந்தியா முழுக்க முழுக்க சொந்தமாக தயாரித்துள்ள ‘Fast Breeder Nuclear reactor’ எனும் அணுமின் நிலையம் குறித்துதான்.

இந்தியாவின் கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையத்தின் ‘Fast breeder reactor’, தற்போது ‘Criticality’ எனும் கட்டத்தை நெருங்கி விட்டதாம். இதில் criticality என்பது அணு எதிர்விணையில் தன்னிறைவை அடையும் நிலையை குறிப்பிடுகிறது.

இந்திய விஞ்ஞானிகள், அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் பிரான்ஸால் கூட சாதிக்க முடியாததை சாதித்து உள்ளனர். ரஷ்யா மட்டுமே இத்தொழில்நுட்பத்தை கொண்ட ஒரே நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் முதலாக, Fast breeding reactor எனப்படும், அணுமின் நிலையத்தை இந்தியா வணிக ரிதியாக செயல்படுத்தும் வகையில் வெற்றியை ஈட்டியுள்ளது, உலக அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

இனி அடுத்த கட்டமாக இந்தியா, யுரேனியத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை தவிர்த்து, இந்தியாவில் அபரிதமாக கிடைக்கும் தொரியத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கலாம். (உலகில் நான்கில் ஒரு பங்கு தொரியம் இந்தியாவில் உள்ளது குறிப்பிடத்தக்கது)

சற்று முன் பாக்கிஸ்தான் இது சம்பந்தமாக தன் அச்சத்தை வெளிப்படுத்தி உள்ளது. இந்த ரியாக்டர்கள் மூலம் தொரியத்தை (அணுகுண்டு உருவாக்க பயன்படுத்தும்) புளுடோனியமாக மாற்றி விடலாம் என்பதே காரணம். புளுடோனியத்தை வைத்து எரிசக்தியும் தயாரிக்கலாம், அணுகுண்டும் தயாரிக்கலாம்.

இதற்காக இந்திய அணுமின் கழகம், பல அரசு மற்றும் தனியார் மத்தியதர தொழில் நிறுவனங்களோடு செயல்பட்டு வந்துள்ளது. இந்த வெற்றியை பிரதமர் மோடி வெகுவாக பாராட்டி உள்ளார்.

நல்லவன், வல்லவன் நாடாண்டால் அனைத்தும் சாத்தியமே.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...