பிரதமர் பல விஷயங்களை மறைக்கிறார் எனவேதான் ஸ்பெக்ட்ரம் ஊழல் சம்மந்தமாக அவரது அரசு நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு விருப்பம் இல்லாமல் இருக்கிறது என்று பாரதிய ஜனத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார் .
ஸ்பெக்ட்ரம் ஊழலை எதிர்த்து தில்லி வீதிகளில் பாரதிய ஜனத்தா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் நடத்தி வரும் மாபெரும் பொது கூட்டத்தில் சுஷ்மா இன்று பங்கேற்று பேசினார்.
இதில் அவர் பேசியதாவது; பிரதமர் மன்மோகன் சிங்கும் கூட்டு குழு விசாரணை இல்லை என்கிறார். சோனியா காந்தியும் கூட்டு குழு விசாரணை இல்லை என்கிறார். இரண்டு பெரும் ஏன் கூட்டு குழு விசாரணை வேண்டாம் என்று கூறுகிறீர்கள். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சம்மந்தமாக நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்கு குழு முன்பு ஆஜராக தயார் என பிரதமர் மன்மோகன் சிங் அறிவிக்கிறார். ஆனால் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணையை எதிர்கொள்ள ஏன் அவர் தயாராக இல்லை என்று சுஷ்மா கேள்வி எழுப்பியுள்ளார் .பிரதமர் அவர்களே நீங்கள் நிறைய மறைக்கிறீர்கள். அதனால்தான் ஜேபிசி விசாரணைக்கு விருப்பம் இல்லாமல் உள்ளீர்கள் என சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.