ஜெய்ப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் இளைஞர்களின் மீதான காங்கிரஷின் கரிசனம் ராகுலை முன்னிறுத்த காங்கிரஸ் ஆடும் கபட நாடகமே என்று பாரதீய ஜனதா கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:-
ஜெய்ப்பூர் கூட்டத்தில் காங்கிரஸ் குறைவான சுயபரிசோதனை செய்து அதிகமாக கவலை பட்டுள்ளது என்பது மிகதெளிவாக தெரிகிறது. 9 வருட ஆட்சி காலத்துக்கு பிறகு இளைஞர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் குறித்து சோனியா காந்தி கவலை தெரிவித்துள்ளார்.
வரும் 2014 பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தியை தலைவராக முன்னிறுத்த காங்கிரஸ் கட்சி திட்டமிடுகிறது. ஆகையால் இளைஞர்களை கவரும்நோக்கில், இளைஞர்களின் மீது காங்கிரஸ் கரிசனம் காட்டுகிறது.
இங்கு நடக்கும் விவாதம், ராகுல்காந்தியை தலைவராக முன்னிறுத்துவதற்கே அன்றி, இளைஞர்களின் மீதான பொறுப்பல்ல. இது ராகுல் மீதுள்ள அக்கறையா? அல்லது இளைஞர்களின் மீதான அக்கறையா?.
மக்களில் 51 சதவிகிதத்தினர் 25 வயதுக் குள்ளானவர்கள். 65 சதிவிகிதத்தினர் பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். இளைஞர்களின் சதவிகிதம் இங்கு அதிகம் இருப்பதால், 9 வருடங்களுக்கு பிறகு சோனியாகாந்தி இளைஞர்கள் குறித்து கவலையும் அக்கறையும் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து சோனியா இளைஞர்களின் மீது கவலை கொள்கிறார் என்றார்.
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.