வெங்காயம் மற்றும் காய்கறிகலின் கடுமையான விலை உயர்வால் , உணவு பொருட்களுக்கான பணவீக்கம் 4 சதவீதம் அதிகரித்துள்ளது 18.32 % எட்டியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் வெங்காயம் மற்றும் காய்கறி விலை, ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில் இருந்தது. இதனால், நவம்பர் வரை கட்டுக்குள் இருந்த உணவு பொருள் பணவீக்கம் தொடர்ந்து மேலே ஏற துவங்கியது. கடந்த டிசம்பர் 18ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் உணவு பொருள் பணவீக்கம் 14.44 சதவீதமாக இருந்தது. இதன்பின் ஒரு வார காலத்தில் தான் அனைத்து விலைகளும் கூடின. வெங்காயத்தில் துவங்கி, பூண்டு, புளி என சகட்டுமேனிக்கு விலைகள் ஏறின. குறிப்பாக வெங்காயத்தின் விலை 82 சதவீதமும், காய்கறிகள் விலை 59 சதவீதமும் உயர்ந்து, பால் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தன. இதனால், டிசம்பர் 25ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் பணவீக்கம் 18.32 சதவீதமாக உயர்ந்தது. தொடர்ந்து ஐந்து வாரமாக உணவு பொருட்கள் பணவீக்கம் இரட்டை இலக்கத்திலேயே உயர்ந்து கொண்டிருக்கிறது.
உணவு பொருள் பணவீக்கம் உயர்வது, வேகமான பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகரும் இந்தியாவுக்கு தடையாக இருக்கும் என, சர்வதேச நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
{qtube vid:=8MbJOaiqQVE}
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.