இந்தியா, தைவான் இடையே இயற்கை வேளாண் பொருட்களுக்கான பரஸ்பர அங்கீகார ஒப்பந்தம் புதுதில்லியில் தைவானுடனான வர்த்தகம் குறித்த 9வது பணிக்குழு கூட்டத்தின் போது 2024 ஜூலை 8 முதல் செயல்படுத்தப்பட்டது. இந்தியாவிற்கும் தைவானுக்கும் இடையிலான இந்த ஒப்பந்த செயலாக்கம் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும், ஏனெனில் இது இயற்கை வேளாண் பொருட்களுக்கான முதல் இருதரப்பு ஒப்பந்தமாகும்.
இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், தைவானின் வேளாண் அமைச்சகத்தின் வேளாண் மற்றும் உணவு முகமை ஆகியவை இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தும் முகமைகளாகும்.
பரஸ்பர அங்கீகாரம் இரட்டை சான்றிதழ்களைத் தவிர்ப்பதன் மூலம் இயற்கை வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை எளிதாக்கும்; இதனால், இணக்க செலவைக்குறைத்தல், ஒற்றை ஒழுங்குமுறையை கடைப்பிடிப்பதன் மூலம் இணக்கத் தேவையை எளிதாக்குதல், இயற்கை வேளாண்மை துறையில் வர்த்தக வாய்ப்புகளை மேம்படுத்துதல்.
அரிசி, பதப்படுத்தப்பட்ட உணவு, பச்சை/கருப்பு, மூலிகை தேயிலை, மருத்துவ தாவர பொருட்கள் போன்ற முக்கிய இந்திய இயற்கை வேளாண் பொருட்களை தைவானுக்கு ஏற்றுமதி செய்ய இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |