நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் சுத்தம் செய்து பொடியாக வெட்டி, ஒரு சுத்தமான தட்டில் போட்டு நல்ல வெய்யிலில் வைத்து சருகுபோல உலர்த்தி, உரலில் போட்டு இடித்து மாச்சல்லடையில் போட்டுச் சலித்து வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, தினசரி காலை, மாலை தேக்கரண்டியளவு தூள் எடுத்து வாயில் போட்டு விழுங்கி விட்டு வெந்நீர் குடிக்க வேண்டும்.இந்தப்படி தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டால் நீரிழிவு குணமாகும்.
முதல் நாள் சிறுநீரில் சர்க்கரையிருக்கிறதா? என்று தெரிந்து கொண்டு மறுநாள் மருந்து சாப்பிட்டு அடுத்த நாள் பரிசோதனை செய்தால் சர்க்கரை எவ்வளவு குறைந்திருக்கிறது என்பது தெரியும்.
நித்தியக் கல்யாணிப் பூவில் 7 பூக்களைக் கொண்டு வந்து அதைச் சுத்தம் செய்து, ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி, ஆறிய பின் வடிகட்டி வைத்துக் கொண்டு, காலை, பகல், மாலை ஆக ஒரு நாளைக்கு மூன்று வேலைக்கு இந்தக் கஷாயத்தைப் பங்கிட்டுச் சாப்பிட்டு வந்தால், அடிக்கடி சிறுநீர் போவது, அதிக அளவில் சிறுநீர் போவது, அதிக தாகம் இவைகள் குணமாகும்.
You must be logged in to post a comment.
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
good