பாகிஸ்தானுக்கு பெருந்தன்மைக்கான தகுதி இல்லை

பாகிஸ்தானுக்கு  பெருந்தன்மைக்கான தகுதி இல்லை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அப்சல் குரு மரண தண்டனையை எதிர்த்து தீர்மானம் இயற்றப்பட்டிருப்பது இந்தியாவின் தேசியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் கவலைக்குரியதாகும் மரண தண்டனைக்கு உள்ளான நபர் இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில்

தலையிடுவதோடு மட்டுமின்றி, பாகிஸ்தானின் கூட்டு அவையில் அதிகாரப்பூர்வமான அறிக்கை ஒன்றே வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை பாகிஸ்தானின் அரசு, ராணுவம், அவர்களது உளவுத்துறையான ஐஎஸ்ஐ, குடிமக்கள் பரிபாலனம் ஆகியவை யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது நமது வியப்பாக இருந்துவந்தது ஆனால் சமீபத்திய தீர்மானத்தின் மூலம், இந்த வேறுபாடுகள் அனைத்தும் குலைந்துவிட்டன. இந்தியாவில் நடந்த மோசமான தாக்குதல்களில் ஒன்றுக்கு பாகிஸ்தான் அதிகாரப்பூர்வ அங்கீகார முத்திரை அளித்துவிட்டது.

இதுவரை இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் எல்லைக்கு அப்பால் திட்டமிடப்பட்டதற்கு சாட்சியங்கள் இருக்கின்றன என்று நாங்கள் குற்றம்சாட்டி வந்தோம். ஆனால் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் சமீபத்திய தீர்மானத்தின் மூலம், அது உறுதிப்பட்டுள்ளது. நமது நாட்டில் நிலவும் சட்டத்தின் ஆட்சி மூலம், தண்டனை கொடுக்கப்பட்ட நபருக்கு பாகிஸ்தான் ஆதரவு கொடுத்து தீர்மானம் இயற்றியுள்ளது. நமது படைவீரர்களின் தலைகளை வெட்டியதும், ஐதராபாத்தில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது, சிஆர்பிஎப் வீரர்களைத் தாக்கியது போன்ற சம்பவங்களின் நிறைவுரையாகத்தான் பாகிஸ்தானின் தீர்மானம் இருக்கிறது.

தீவிரவாதிகளின் விஷயத்தில் பாகிஸ்தானின் உளப்போக்கு என்ன என்பது நன்றாக தெளிவாகிவிட்டது. இச்சூழ்நிலையில் பாகிஸ்தானை எப்படி நடத்துவது என்பதை மத்திய அரசுதான் திட்டமிட வேண்டும். மரியாதைக்குரிய பிரதம மந்திரி, பாகிஸ்தானுடன் கூடுதல் பெருந்தன்மையுடன் நடக்கத் தயாராக இருப்பதாக முன்பு கூறியுள்ளார்.
பாகிஸ்தான் கூடுதல் பெருந்தன்மையுடன் நடக்கவேண்டும்
ஆனால் இந்தியாவை பாகிஸ்தான் தொடர்ந்து கோபமூட்டிவருகிறது. இந்நிலையில் பிரதமர் அந்தப் பெருந்தன்மையை மறக்கவே வேண்டும். பாகிஸ்தானுக்கு அந்தப் பெருந்தன்மைக்கான தகுதி இல்லை. பாகிஸ்தானின் தீர்மானத்தைப் பொருத்தவரை, இந்தியாவில் நடக்கும் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு அவர்கள் ஆதரவு தெரிவிக்கும் வரை முறையான பேச்சுவார்த்தைகளால் எந்தப் பயனும் இல்லை என்றே நினைக்கிறேன். இந்தியாவின் கூடுதல் பெருந்தன்மையை எதிர்பார்ப்பதை விட பாகிஸ்தான் கூடுதல் பெருந்தன்மையுடன் நடக்கவேண்டும். இருநாடுகளுக்கு இடையிலான உறவுகள் உண்மையிலேயே சீர்ப்பட வேண்டும் என்று விரும்பினால் இதுபோன்ற தீர்மானங்களின் மூலம் அது சாத்தியப்படாது. மாலே, ரோம் அல்லது இஸ்லாமாபாத் என்று எந்த நாடாக இருந்தாலும் சரி, நாம் இப்போது இருக்கும் தீவிரமான நிலையை சந்தித்துவரும் சூழலில் எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறோம்.

நமது வெளியுறவுக் கொள்கையை நாம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன். அத்துடன் அக்கொள்கைகள் நம்மை எந்த இடத்திற்கு கொண்டு செல்கிறது  என்பதையும் நாம் கருதவேண்டும். சர்வதேச ரீதியில் தொடர்ந்து இதேபோல இந்தியா பல்வேறு நாடுகளால் ஏமாற்றப்பட்டால், நமது வெளியுறவு கொள்கையில் ஏதோ தவறு இருக்கிறது என்பதே அர்த்தம். அதனால் மாண்புமிகு பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சரும் ஒரு தேதியை நிர்ணயித்து இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக விவாதிக்க வேண்டும் .

நன்றி ஸ்ரீ அருண் ஜேட்லி

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...