ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் உருண்டைவடிவில் சதைப்பற்றோடு காணப்படும். ஒரு பெரிய விதையைச்சுற்றி வெண்ணெய் போன்ற சதைப்பகுதியுடன் தோல் கடினமாக இருக்கும். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருந்து கருஞ்சிவப்பு வரையான நிறம் கொண்டது.
கடுமையான சீரணக் கோளாறுகளில் பரிகாரமாகும் சிறந்த உணவு. வயிற்றில் ஏற்படும் திருகுவலி மற்றும் சீதலத்துக்கு இப்பழத்தின் சாற்றையே சீன மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். குடற்புண்ணுக்கு அவக்கேடோ பழச் சாற்றைத்தான் ஜப்பானியர்கள் பயன்படுத்துகிறார்கள்.
வாய் நாற்றத்தைப் போக்கக் கூடிய மற்ற 'லோஷன்'களை விட பலமடங்கு சிறந்தது. வாய் நாற்றத்துக்கு காரணமான குடல் அழுகல் சமாச்சாரங்களை அகற்றும்.
செதில் போன்று திட்டுத்திட்டாக இருக்கும் சரும நோய்க்கான சிகிச்சையில் அவக்கேடோ எண்ணெயைப் பயன்படுத்தலாம். அவக்கேடோ பழங்கள் எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.
இதன் எண்ணெய் அழகு சாதனத்தயாரிப்பில் இடம் பெரும் பொடுகைக் கட்டுப்படுத்தும் கண்டிஷனர், சோபை இழந்த தலை முடிக்கு புத்துயிரூட்டும் தைலம், குளியல்தைலம், ஷாம்பு தயாரிப்புகளில் அவக்கேடோ பழஎண்ணெய் பயன்படுகிறது.
முடிந்தவரை பழத்தை அப்படியே சாப்பிட்டு விடுவது நல்லது. சமைத்தால் துவர்க்கும். குளிரில் தாக்குப் பிடிக்காது. பழத்தை அரை வெப்பநிலையில் சில நாள் வைத்திருக்க முடியும். குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது.
நன்றி : நரேந்திரன்
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.