தற்காலத்தில் ஒருவன் மோசஸ் , இயேசு கிறிஸ்து , புத்தர் ஆகியவர்களின் மேற்கோள்களை எடுத்துக்காட்டாக சொன்னால் , அவன் ஏளனத்துக்கு ஆளாகிறான். ஆனால் ஒரு ஹக்ஸ்லி, டின்டால், டார்வின் ஆகிய இவர்களின் பெயர்களை அவன் சொல்லட்டும். அவர்களுடைய
கருத்து என்னவாக இருந்தாலும் மக்கள் அதை அப்படியே கேள்விக்கிடமின்றி நம்பிவிடுவார்கள்.
'ஹக்ஸ்லி இப்படி சொல்லிருக்கிறார்' என்று குறிப்பிட்டால் அதுவே பலருக்கு போதுமானதாக இருக்கிறது. நாம் மூட நம்பிக்கையிலிருந்து விடுபட்டவர்கள்தாம் என்றாலும் , முன்பு கூறியது மத வாழ்க்கை சேர்ந்த மூட நம்பிக்கையாக இருந்தது. பின்னால் குறிப்பிட்ட இது , விஞ்ஞான ரீதியான மூட நம்பிக்கையாக இருக்கிறது. மதத்தை சேர்ந்த மூட நம்பிக்கைகளின் மூலமாகத் தான் உயிரோட்டம் தரக்கூடிய ஆன்மிக கருத்துகள் வெளிவந்திருக்கின்றன. விஞ்ஞான ரீதியான இன்றைய மூட நம்பிக்கையின் மூலமாகவே காமமும் , பேராசையும் விளைந்திருகின்றன. முதலில் கூரிய மூட நம்பிக்கை கடவுள் வழிபாடாக இருந்தது. பின்னால் கூரிய இதுவோ அருவருக்கத் தக்க செல்வம், புகழ், அதிகாரம் ஆகியவற்றின் வழிபாடாக இருக்கிறது. இது தான் இந்த இரண்டு மூட நம்பிகைகளுக்கும் உள்ள வேறுபாடு.
சுவாமி விவேகானந்தர்
You must be logged in to post a comment.
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
3granddaughter