குஜராத் முதல்வர் நரேந்திரமோடி விசாகேட்டு விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் செய்தியாளர்களிடம்பேசிய, அந்நாட்டு அரசின் செய்திதொடர்பாளர் ஜென்சாகி இவ்வாறு கூறியுள்ளார். அமெரிக்க குடியுரிமை சட்டவிதிகளின் படி
மோடியின் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று அவர் கூறினார். தனிநபருக்காக தங்கள் கொள்கையில் மாற்றம் ஏதும்செய்யவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க குடியுரிமை விதிகளின்படி விசாவழங்க மோடி தகுதி பெற்றுள்ளாரா என்று பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
குஜராத் கலவரத்தைதொடர்ந்து மோடிக்கு விசாவழங்க கடந்த 2005ஆம் ஆண்டு அமெரிக்கா தடைவிதித்தது. இந்நிலையில் நரேந்திர மோடிக்கு விசாவழங்க வேண்டும் என பலதரப்பினரும் வழியுறுத்தி வருகின்றனர் . இதனிடையே மோடிக்கு விசாவழங்க விதிக்கப்பட்ட தடையை விலக்ககூடாது என்று 65 எம்பிக்கள் கையெழுத்திட்டு அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு அனுப்பியுள்ளனர்.
ஆனால் ஒபாமாவிற்கு அனுப்பட்டகடிதத்தில் கையெழுத்திடவில்லை என்று எம்பிக்கள் சிலர் மறுத்துள்ளனர். இதனால் சர்ச்சை ஏற்பட்டுள்ளதையடுத்து எம்.பிக்களின் கையெழுத்தை மோசடியாகபோட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.