6 நாள் பயணமாக நாளை (டிச.24 முதல்29 வரை) அமெரிக்கா செல்கிறார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
அமெரிக்க பயணம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்த 6 நாள் பயணத்தின்போது, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருடன், பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்து, ஜெய்சங்கர் இருதரப்பு பேச்சு நடத்த உள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் மூலம் இந்திய, அமெரிக்க இருதரப்பு உறவுகள் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சர்வதேச அளவில் இருக்கும் சவால்களை களைய, உள்ளார்ந்த ஒத்துழைப்பு பாதைகள் விரிவடையும். தனது பயணத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வாஷிங்டனில் இந்திய தூதரக அதிகாரிகளின் மாநாட்டிற்கும் அமைச்சர் தலைமை தாங்குவார்.
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |