ம.பி.,யில் பாஜக சார்பில் இந்த மாதம் 25ம் தேதி பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடைபெறுகிறது இதில் அத்வானி, மோடி ஆகியோர் ஒரேமேடையில் பேசுகிறார்கள். பாராளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இதற்கு பா.ஜ.க தலைவர்கள் மிகத்தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.
பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மோடி நாடுமுழுவதும் பிரச்சாரம்செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் 100 கூட்டங்ளில் பேச அவர் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் ம.பி.,யில் பா.ஜ.க எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள் கலந்துகொள்ளும் மிகப்பெரிய கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். போபாலில் இந்த கூட்டம் புதன்கிழமை நடைபெற உள்ளது.
இதற்காக இந்தியா முழுவதிலுமிருந்து தொண்டர்கள் வருவதற்குவசதியாக 12 சிறப்புரயில்கள் இயக்கப்டுகின்றன. சுமார் பத்தாயிரம் பஸ்களும் இயக்கப்படுகின்றன. பஸ், ரயில் தவிர சிறப்புவிமானங்கள், ஹெலிகாப்டர்கள்விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள் தரை இறங்குவதற்கு வசதியாக மேடையருகில் மைதானம் அமைக்கப்படுகிறது.
இந்த பிரம்மாண்டகூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு 50 ஆயிரம் முஸ்லிம்களுக்கு பா.ஜ.க சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 500 பத்திரிகையாளர்களும் இதில் பங்கேற்பார்கள் என தெரிகிறது.
இந்த பொதுக்கூட்டத்தில் அத்வானி, மோடி ஆகியோர் சிறப்புரை ஆற்றுவார்கள். இந்த கூட்டத்தில் 8 லட்சம்பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.