காங்கிரசுக்கு எதிரானசக்திகளை ஒன்றுதிரட்ட வேண்டும் என்பதே எங்கள் இயக்கத்தின் நோக்கமாகும். இரண்டு திராவிட கட்சிகளுக்கு எதிராக ஒருமாற்று அணியை உருவாக்க வேண்டும் என்று காந்தியமக்கள் இயக்க நிறுவனத்தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார் .
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; வருகிற பாராளுமன்றதேர்தலில் காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்ட ஊழல் மக்களை பாதிக்கக் கூடிய மோசமான நிலையாலும், விவசாயிகள், மீனவர்கள் அனைத்து தரப்பினர்களும் காங்கிரஸ் அல்லாத ஒருமாற்று ஆட்சியை விரும்புகிறார்கள்.
தற்போது குஜராத் மாநிலத்தில் நிர்வாகம் சீராகநடை பெறுவதால் மக்களுக்கு பலதிட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. இதற்குகாரணம் அந்த மாநிலத்தின் முதல்வர் மோடியால்தான். அங்கு நிர்வாகம் சிறப்பாக இருக்கிறது. எனவே பாராளுமன்றதேர்தலில் மோடியை முன் நிறுத்துகிறோம். இதைசொல்வதால் என்னை பாஜக.வின் தரகர் என கூறினாலும் எனக்கு கவலை இல்லை.
நாட்டில் ஊழல்செய்து வரும் காங்கிரசை வீழ்த்தி மாற்று ஆட்சிவேண்டும் என்பதற்காக பாடுபட்டுவருகிறேன். காங்கிரஸ் ஜனநாயக விரோதபோக்கான ஆட்சி செய்துவருகிறது. அந்த ஆட்சியை விரட்ட பாஜக கூட்டணியை தவிர வேறுவழியில்லை.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 15 சதவீதம் வாக்குகள் பாஜக விற்கும், 8 முதல் 10 சதவீதம் வரை மதிமுக.வுக்கும், 10 சதவீத வாக்குகள் தேமுதிக.வுக்கும் உள்ளது. எனவேதான் பாஜக , ம.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணிக்காக முயற்சிசெய்து வருகிறேன்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் ராகுலுக்கும், மோடிக்கும் போட்டியில்லை. ராகுலை மக்கள் ஒருபொருட்டாக கருதவில்லை. இந்ததேர்தலின் போட்டியே மதவாதி என சிலரால் கருதப்படும் மோடிக்கும், ஒருநல்ல நிர்வாகி என பலரால் பாராட்டப்படும் மோடிக்கும் தான் நடக்கும் போட்டியாகும என்று அவர் கூறினார்.
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.