இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் ஏகே.அந்தோணி விளக்கம் தர வேண்டும்

 இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் மற்றும் ராணுவத்தினர் ஊடுருவி இந்தியராணுவத்துடன் கடந்த 11 நாட்களாக துப்பாக்கிசண்டை நடத்திவருவது குறித்து ராணுவ அமைச்சர் ஏகே.அந்தோணி விளக்கம் அளிக்கவேண்டும் என பாஜ வலியுறுத்தி உள்ளது.

காஷ்மீரின் பூஞ்ச் எல்லையில் மக்கள்நடமாட்டம் இல்லாத சலாபட் கிராமத்தில், 11 நாட்களுக்குமுன்பு 30க்கும் அதிகமான தீவிரவாதிகள் ஊடுருவினர். அவர்களுடன் பாகிஸ்தான் ராணுவத்தைசேர்ந்த சிறப்பு அதிரடிபடை வீரர்களும் பதுங்கி இருப்பதாக இந்திய ராணுவத்துக்கு தகவல்கிடைத்தது.

இதைதொடர்ந்து சலாபட் கிராமத்தை இந்திய ராணுவம் சுற்றிவளைத்து தாக்குதலை தொடங்கியது. இன்றுவரை தொடர்ந்து 11 நாட்களாக இங்கு துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தியதரப்பில் 5 வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தில்லை. நேற்று இரவு வரை 15 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இன்று காலைவரை நீடித்த துப்பாக்கிசண்டை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் ஊடுருவலுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் தொடர்பில்லை என பாகிஸ்தான் அரசுதரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப்புடன் கடந்த 29ம் தேதி அமெரிக்காவில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் பேச்சு வார்த்தை நடத்தினார். ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு மறுபுறம் தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பி இருக்கும் பாகிஸ்தான் செயலுக்கு பாஜக கடும்கண்டனம் தெரிவித்துள்ளது. ஊடுருவல் தொடர்பாக ராணுவஅமைச்சர் ஏ.கே.அந்தோணி நாட்டுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பாஜக செய்திதொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், தீவிரவாத தாக்குதல்களும், ஊடுருவல்களும் அதிகரித்துவரும் சூழ்நிலையில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தவறு. எல்லையில் எல்லாவகையிலும் இந்திய ராணுவத்தை பாகிஸ்தான் சீண்டிவருகிறது. கடந்த எட்டு வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்ததாண்டு ஊடுருவல்களும், இந்திய நிலைகள்மீதான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. எல்லையில் என்ன நடக்கிறது என்பது குறித்து நாட்டுமக்களுக்கு ராணுவ அமைச்சர் விளக்கம் தர வேண்டும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...