நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து கற்கண்டு 100 கிராம் சேர்த்து மூன்று வேளையும் சுடுநீரில் குடித்து வரவேண்டும்.வயிற்றுவலி பூரண குணமாகி விடும்.
எலுமிச்சம் பழரசம் 10 கிராம்,கற்கண்டு 10 கிராம் இரண்டையும் சேர்த்து தொடர்ந்து குடித்துவர வேண்டும்.
அதிமதுரம் 50 கிராம், இந்துப்பு 50 கிராம், நவாச்சாரம் 50 கிராம் மூன்றையும் பொடியாக்கி 3 கிராம் அளவு வெற்றிலையில் வைத்து மென்று சாப்பிட குணமாகும்.
வயிற்று வலியை நிரந்தரமாகப் போக்குவதற்கு 100 கிராம் முற்றிய அத்தியிலை, வேப்பிலை 100 கிராம், கீழாநெல்லி இலை 100 கிராம், குப்பைமேனி இலை 100 கிராம் ஆகியவற்றை சேகரித்து, நன்கு உலர்த்தி பொடித்து வைத்துக்கொண்டு ஒரு நாளைக்கு மூன்று வேலையும் உணவிற்கு முன்னாள் 5 கிராம் தூளை வாயிலிட்டுத் தண்ணீர் குடித்து வந்தால் வயிற்றுவலி, வயிற்றுப்புண் ஆறி பூரண குணம் பெறலாம்.
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.