பீகாரில் பா.ஜ.க, பிரதமர்வேட்பாளர் நரேந்திரமோடி உரையாற்றவிருந்த பிரசாரமேடை , ரயில்வே ஸ்டேஷன், மைதானம் என்று 6 இடங்களில் இன்று பலத்தசப்தத்துடன் குண்டு வெடித்ததில் 5 பேர் பலியாகியிருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது. 60க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாக தெரிகிறது.
பா.ஜ.க., கூட்டத்திற்கு வந்தவர்கள் மற்றும் மோடியைகொல்ல திட்டம் தீட்டப்பட்டு இந்த குண்டுகள் வைக்ப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . இந்த குண்டுகள் சக்தி குறைந்தது. எனவே பெரும்சேதம் ஏதும் இன்றி முடிந்தது. இந்த குண்டுவெடிப்புக்கு மத்தியிலும் மோடி தனது பிரசாரத்தை ரத்துசெய்யாமல் மேடைக்கு வந்து தொண்டர்களிடம் பேசினார்.
நாடுமுழுவதும் பா.ஜ.,வுக்கு ஆதரவுதிரட்டும் வகையில் நாடு பல்வேறு மாநிலங்களில் நரேந்திரமோடி பிரசாரம் மேற்கொண்டுவருகிறார். கடந்த சில நாட்களாக மத்திய பிரதேசம், சட்டீஸ்கள், மும்பை, டில்லி, ராஜஸ்தான், உத்திரபிரதேசம், தமிழகம், ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம்செய்தார். இவர்செல்லும் இடமெல்லாம் பாஜக ., தொண்டர்கள் லட்சக் கணக்கில் குவிந்துவருகின்றனர். மத்திய அரசுக்கு பெரும்சவால்கள் விட்டுவரும் மோடிக்கு தற்போது இசட்பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. இவர் பங்கேற்கும் கூட்டங்களில் போலீசார் முழு அளவில் 5 அடுக்கு பாதுகாப்புசெய்து வந்தனர். ஆனால் இன்று பீகாரில் அனைத்துபாதுகாப்பையும் மீறி குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது பெரும் பரரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.