கடந்த நவம்பர் மாதம் 29-ந் தேதி சென்னை திருவொற்றியூரில் இருந்து தாமரை யாத்திரை தொடங்கியது. சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்குவது போல ஏழை இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி யாத்திரை நடத்தப்பட்டது.
31 மாவட்டங்களில் சுற்றுப் பயணம் நடத்தப்பட்டது. 1500 பொதுக் கூட்டங்கள் மூலம் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை சந்தித்து இருக்கிறோம். இவர்களுக்கு
இழைக்கப்படும் அநீதி பொது மக்களிடம் மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தாமரை யாத்திரை இன்று (29-ந் தேதி) சென்னை வந்தடைகிறது.
மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே உள்ள மைதானத்தில் சென்னை போராட்டம் என்ற பெயரில் மிகப் பெரிய போராட்டம் நடக்கிறது. காலை 10 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் அகில இந்திய தலைவர் நிதின்கட்காரி கலந்து கொண்டு பேசுகிறார். இதில் மாநிலம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள்.
இது தொடர்பாக தமிழக பா ஜ கா தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ;
இலங்கை கடற்படை கடந்த 10 நாட்களில் 2 தலித் மீனவர்களை சுட்டுக் கொன்றுள்ளது. இதை தடுக்க மத்திய-மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மீனவர் உயிருக்கு ரூ.5 லட்சம் தான் விலை மதிப்பா? அடுத்த மாதம் 4-ந் தேதி சென்னை வரும் சுஷ்மா சுவராஜ் பலியான மீனவர் குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்வார்.
மீனவர்களை தொடர்ந்து தாக்கினால் இலங்கை கடற்படையை தமிழக மீனவர்களே எதிர் கொள்ளும் சூழ்நிலை வரும். தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கப்படுகிறது. வருகிற தேர்தலில் இதற்கு பாடம் புகட்ட அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும். இதற்கான முயற்சியை அ.தி. மு.க. மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார். பேட்டியின் போது மாநில துணை தலைவர் நரேந்திரன், பொதுச் செயலாளர் மாலதி சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.