‘சென்னை டாஸ்மாக் அலுவலகத்தை, முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அமலாக்கத் துறை செய்திக்குறிப்பில், ‘டாஸ்மாக்’ நிறுவனம், அதற்கு மது வகைகளை வழங்க கூடிய ஆலைகள், பாட்டில் நிறுவனங்கள், 1,000 கோடி ரூபாய்க்கு ஊழல் செய்துள்ளன. அந்த பணம் எல்லாம், அரசியல் லாபத்திற்காக, தி.மு.க.,வுக்கு சென்றுள்ளதை பார்க்கிறோம்.
பத்து நாட்களாகவே, தி.மு.க., எதற்காக பல பிரச்னைகளை கையில் எடுத்து திசை திருப்பியது என்பது, இதன் வாயிலாக தெரியவந்துள்ளது. டில்லி, சட்டீஸ்கரில் நடந்ததை விட, டாஸ்மாக் ஊழல் மிகப்பெரியது.
அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்தபோது, நள்ளிரவில் முதல்வர், துணை முதல்வர் சென்று பார்த்தனர். அவரை விடுவிக்க அரசே போராடியது. சிறையில் இருந்து வெளியே வந்ததும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதிலிருந்தே சாராய துறை, தி.மு.க.,வுக்கு எவ்வளவு முக்கியம் என்பது தெரியும்.
மதுவின் கோரப் பிடியில் இருந்து, தமிழகத்தை காக்க வேண்டும். வரும், 17ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். தொடர்ந்து, ஒவ்வொரு டாஸ்மாக் கடையையும் முற்றுகையிட போகிறோம். அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும். முதல்வரே பதவி விலக வேண்டும். இவ்வாறு கூறினார்.
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |