இளம் பெண்ணை வேவுபார்த்த விவகாரத்தில் மத்திய அரசின் விசாரணையை நீதி மன்றத்தில் சந்திக்க போவதாக பாஜக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பாஜக.,வின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவருமான அருண் ஜேட்லி டெல்லியில் கூறியதாவது:
இளம் பெண்ணை வேவுபார்த்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விசாரணைக்கமிஷன் அமைத்துள்ளது. இது மாநிலங்கள் மீது நடத்தப்பட்டதாக்குதல். கூட்டாட்சி முறைக்கு எதிரானது. இந்தசெயலுக்கு மற்ற மாநிலங்களின் முதல்வர்களும் எதிர்ப்புதெரிவிப்பார்கள் என நம்புகிறேன். இதை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம்.
அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்தோல்வியில் இருந்து காங்கிரஸ் கட்சி பாடம்கற்றுக் கொள்ளவில்லை. அந்தக்கட்சி, பா.ஜ.க.,வின் பிரதமர்வேட்பாளர் நரேந்திரமோடிக்கு எதிராக அரசியல் ரீதியாகப் போராடாமல் அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டுகிறது. இதற்காக, புலன்விசாரணை அமைப்புகள் மூலமாகவும் தற்போது விசாரணை கமிஷன் மூலமாகவும் காங்கிரஸ் மிரட்டுகிறது என்றார்.
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
Leave a Reply
You must be logged in to post a comment.