பாஜகவின் அடுத்தகட்ட வளர்ச்சி தென்னிந்தியாவில்

நமது நாட்டில் இன்னும் 40 ஆண்டுகளுக்கு பாஜக சகாப்தம்தான், இனி தென்னிந்தியாவில் பாஜக வளரும், தமிழகத்தில் பாஜக ஆட்சிபொறுப்புக்கு வரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பாஜக தேசியசெயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. இன்று நடைபெற்ற இரண்டாம்நாள் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அரசியல் தீர்மானத்தை முன் மொழிந்து பேசினார். இதனை அசாம் முதல்வர் ஹிமானந்த பிஸ்வா சர்மா செய்தியாளர்களிடம் கூறினார். கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:

வாரிசு அரசியல், சாதிவெறி, திருப்திப்படுத்தும் அரசியல் ஆகியவையால் பலஆண்டுகளாக நாடு அனுபவித்த துன்பங்கள் ஏராளம். இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த கட்சிகள் இப்போது வீழ்ச்சி அடைந்துள்ளன. குஜராத்கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி மீது அனைத்து குற்றச்சாட்டுகளும் உச்சநீதிமன்றத்தால் தவறானவை என்று அறிவிக்கபட்டு விட்டது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. குஜராத்கலவரம் தொடர்பான விசாரணையை எதிர்கொள்ளும் போது மோடி அமைதியாக இருந்தார். அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பியதை அடுத்து, காங்கிரஸ் வன்முறையை பரப்பியது.

எதிர்க் கட்சிகள் இன்று பிளவுபட்டுள்ளது. கட்சியில் ஜனநாயகத்தை நிலைநாட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் போராடுகிறார்கள். ஆனால் கட்சித்தலைவரை அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை. காங்கிரஸுக்கு மோடி குறித்த பயம் உள்ளது. தேசிய நலன்கருதி எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவையும் அவர்கள் எதிர்க்கிறார்கள்.

அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் இந்தியாவில் பாஜகவின் சகாப்தமாக இருக்கும். இந்தியா உலகிற்கே தலைமைதாங்கும். தெலங்கானா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் பாஜக விரைவில் ஆட்சிக்குவரும். பாஜகவின் அடுத்தகட்ட வளர்ச்சி தென்னிந்தியாவில் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...