கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 56க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரத்தில் காங்கிரஸ், ஒரு அறிக்கை கூட வெளியிடாமல் மவுனம்காப்பது அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறியுள்ளார்.
இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
கண்டனம்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 56 பேர் இறந்தனர். 200 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இந்தசம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. கள்ளச்சாராய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.
இந்த விவகாரத்தை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என பா.ஜ.க சார்பில் வலியுறுத்துகிறேன். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு ஆளுங்கட்சியினர் ஆதரவுஅளிப்பதால் மாநிலஅரசு நடத்தும் விசாரணை முழுமை பெறாது. இதனால், இந்த விவகாரத்தை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |