நான் கொஞ்சம் " லேட்தான்"— ஆனாலும் கருணாநிதி பற்றி எழுதினால் தாமதமானாலும். சூடுகுறையாதுதான்
துங்குகின்ற தந்தையை காலை 6.30 மணிக்கு எழுப்பிய தனயன் ( கருணாநிதி அதிகாலையிலேயே எழுந்து விடுவார் என்பதும், தற்போது நடக்க முடியாததால், யோகாசன பயிற்சி மட்டும் செய்கிறார் எனபதும் பத்திரிக்கை செய்திகள்)..தன் தரப்பு நியாயங்களை வாதிட்டதும், பிற்பகலில் தந்தை இவரை கட்சியை விட்டே நீக்கியதும், நாடறிந்த செய்தி..
பதவிப்போட்டிகள் உலகத்தில் "நடக்காதது " ஒன்றுமில்லை..கலைஞர் குடும்பத்தில் இது நடப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை..ஆட்சியில் இருந்த போதே தமிழகத்தை 4 ஆக கூறு போட்டு, குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் வசூல் உரிமை பட்டாவை வழங்கியவர் கலைஞர் அவர்கள்.
முதல் பங்கை கடைசி மகள் கனிமொழிக்கு ராஜ்யசபா எம்.பி.யாகவும், இலக்கிய அணி செயலாளராகவும், கொடுத்து, துணைவி ராசாத்தி குடும்பம் "பொங்கி எழாமல்" " அணைத்து" வைத்தார் கலைஞர்..
இரண்டாவது பங்கில், முதல் மனைவி, தயாளு குடும்பத்தில், அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும்தான் தொடர் குடைச்சல்கள்..இதற்கு முன்னமே அழகிரி கொடுத்த குடைச்சல்களில் அழகிரியை எவ்வளவு முறை தான் கலைஞர் காப்பாற்ற முடியும்?
இந்துமதம் தெய்வீக மதமல்லவா?—முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமல்லவா?—கலியுகத்தில் செய்தபாவங்களை கண்முன்னமே அனுபவித்தாகவேண்டும் என்பது விதியல்லவா?
கட்சியையே உயிராகவும் கலைஞரையே தெய்வமாகவும் நினைத்து பணியாற்றிய அவரது மந்திரிசபை சகா..தா.கிருட்டிணன்..அவர்களை மகன் அழகிரிக்கு போட்டியாக வந்துவிட்டதாக எண்ணி,மகனுடைய ஆட்கள் அவரை தீர்த்துக்கட்ட,— நீதி வழங்கி அனுதாம் தெரிவிக்க வேண்டிய கலைஞர், —மகனுக்கு ஆதரவாக, "இதுமாதிரி கொலைகள், திராவிட இயக்கத்தில், நடக்காத ஒன்றுமில்லை", என்றார்..அதிமுக அரசு "நீதி வழங்கிவிடாமல்" இருக்க, வழக்கை அடுத்த மாநிலம், ஆந்திராவுக்கு மாற்றி, மகனுக்கு விடுதலை பெற்றுத்தந்தார் கலஞர் அவர்கள்..
மருமகன்கள், கலாநிதி, தயாநிதி, நடத்தும், பத்திரிக்கை தினகரனில், முதலமைச்சர் பந்தயத்தில் ஸ்டாலின் தான் முன்னிலை…அழகிரி ஆட்டத்திலேயே இல்லை..என எழுதியபோது, பத்திரிக்கை அலுவலகத்தை சூறையாடி, தீவைத்து இரண்டு அப்பாவி உயிர்களை கொன்றது அழகிரி ஆட்களல்லவா?
ஆக தன் குடும்பத்திலுள்ளவர்களை எதிர்த்தால், அவன் "மந்திரியானாலும், தீர்த்துக் கட்டு…மருமகனானாலும் போட்டுத்தள்ளு…தன் குடும்பத்திலுள்ளவரே தன்னை எதிர்த்தாலும், அவரை முடித்து விடு..கட்சி விட்டு நீக்கிவிடு… ""இறந்து போவாய் என சாபமிட்டார்"—என கொலைப்பழி சுமத்திவிடு…இதுவே திமுகவின் "கலைஞரிசம்"–வைக்கோவை கொலைப்பழி சுமத்திதானே வெளியாற்ரினார்கள்.
இதெல்லாம் சரிதான்..கலைஞர் குடும்பம் இப்படித்தான் சாதாரணகாலத்தில் "வேலையை காட்டுவார்கள்"..–பிரச்சினை என்று வந்துவிட்டால் ( 2000த்தில் கலைஞரை கைது செய்தபோது..நடந்தது கொண்டது போல..) குடும்பமே ஒன்றாய் கூடி ஊரையே ரெண்டு படுத்தி விடுவார்கள்..
எனக்கு ஒன்று மட்டும் புரிய வில்லை..படுக்கையில் இருந்த தகப்பன் கலைஞரை மகன் அடித்ததாக வந்த செய்தியில், ஆச்சரியம் எதுவும் இல்லை..அது அவர்கள் குடும்ப பண்பாடு—பாரம்பரியம்..ஏற்கனவே ஸ்டாலினும் தந்தைக்கு "அடி"க்கடி"—இப்படித்தான் பரிசு கொடுப்பார் எனபதும் பத்திரிக்கை செய்தி..இப்படி ஒரு "பண்பட்ட " குடும்பம் இது..
ஆனால் "ஸ்டாலின் இன்னும் நான்கு மாதத்தில்————……………………."என்று ஒருவேளை அழகிரி கூறினார் என்பது உண்மை என்று ஒத்துக்கொண்டால் கூட…அந்த செய்தியை ஒரு தகப்பனே பத்திரிக்கையில் எழுதுவது பேசுவது, உலகில் எந்த நாகரீகமான குடும்பத்திலும் நடக்காது
இப்படிச்சொல்லி மகன் அழகிரியை "காட்டிக்கொடுப்பதால்—போட்டுக்கொடுப்பதால்"—தனுக்கு மாபெரும் தலைகுனிவு—அவமானம்—என்பதை கலைஞர் உணராமல் இருப்பார் என்று நீங்கள் நம்புகிருகீர்களா?
பின் ஏன் இப்படி அழகிரி மீது ஒரு மாபெரும் குற்றச்சாட்டு?—ஒருவேளை நாளைக்கு ஏதாவது ஒன்று நடந்துவிட்டால்—–அத்ற்கான ஆதாரம் உண்டாக்கும் முயற்ச்சியா இது?—அல்லது அனுதாபம் தேடும் நிகழ்ச்சியா இது?
சேற்றில் விழுந்து உடலெல்லம் அசிங்கமானதை பற்றி கவலைப்படாமல், மூக்கில் வழிந்த சேரை அகற்றி மீசையை முருக்குவது போல,இந்த களயபரத்திலும், ஸ்டாலினுக்கு "இசட்" பிரிவு பாதுகாப்பு கேட்டத்துதான்..சிரிப்பின் உச்சகட்டம்..
ஆக கூட்டணிக்கு ஆள் கிடைக்காமல் கட்சிகளின் காலில் விழுந்து கெஞ்சுவது ஒருபுறம், குடும்பத்தில் நடக்கும் அடிதடிகளில், "தனயன்கள் ஒவ்வொருவரும் சுமத்திக்கொள்ளும கொலைப்பழியை " பத்திரிக்கைகளுக்கு கொடுத்து விளம்பரம் தேடும் அவலம் மறுபுறம்..
நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்
பாஜக மாநிலப் பொருளாளர்
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
Leave a Reply
You must be logged in to post a comment.