பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ஏற்பட்டால் அது வீங்கி, வயிற்றின் வலது பக்கம் வலி ஏற்படுவதுடன்… கொழுப்பைக் கரைத்து ஜீரணிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, இவர்கள் கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
எண்ணெயில் வறுத்த உருளைக் கிழங்கு, சிப்ஸ், நெய், வெண்ணெய், கொழுப்பு நிறைந்த இறைச்சி, முட்டை வகைகள், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் முதலியவை முக்கியமானவை.
இத்துடன் முட்டைக்கோஸ், காலிப்ளவர், பட்டாணி, பீன்ஸ் வகைகள், கொட்டை வகைகள், பாப் கார்ன், உலர்ந்த பழங்கள், ஊறுகாய் வகைகள், அதிகக் காரமான உணவுகள், ஆகியவையும் குறிப்பிடத் தகுந்தவை.
புரோட்டீன்:
இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு 1 கிராம் வீதம் உண்ணலாம். மிகவும் புரதம் நிறைந்த உணவை உட்கொண்டால்… அவை பித்த நீரில் கொலஷ்டிராலின் அளவை அதிகரிக்கச் செய்யும்.
கார்போஹைட்ரேட்:
இவர்கள் ஓரளவு கார்-போ-ஹைட்ரேட் நிறைந்த உணவை உண்ண வேண்டும். கொழுப்பில் கரையும் வைட்டமின்களையும் அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
மாதிரி தினமும் :
அதிகாலை: அதிகப் பொடி சேர்க்காத தேநீர் 1 கப் சார்க்கரையுடன்…
காலை : பதப்படுத்தப்பட்ட பால் ஒரு கப், டோஸ்ட் செய்யப்பட்ட ரொட்டி இரண்டு சிறிதளவு ஜாமுடன்.
மதியம் : சோறு ஒரு கிண்ணம், பருப்பு சிறிதளவு, மோர், முட்டை வெள்ளைக் கரு, காரட், பச்சைக் காய்கறிகள், சமைப்பதற்கு மட்டும் சிறிதளவு சூரியகாந்தி எண்ணெய்.
4 மணிக்கு: அதிகம் பொடி சேர்க்கப்படாத தேநீர் 1 கப் + சர்க்கரையுடன், பிஸ்கட் 3 அல்லது 4.
இரவு : கூட்டான் சோறு 1 கிண்ணம், ஆரஞ்சு பழம்.
இரவு படுப்பதற்கு முன்பு : பால் ஒரு கப், சர்க்கரையுடன் இவ்வாறு உணவு எடுத்துக் கொள்கின்றபோது கிடைக்கும் சத்து 1500 கலோரி அளவும், 30 கிராம் கொழுப்பும், 50 கிராம் புரோட்டீனும் ஆகும்.
நன்றி : டாக்டர் முத்துச் செல்லக்குமார்
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.