தமிழகத்தில் போட்டி என்பது 3 அணிக்கும் சமமாகவே இருக்கும், திமுக., அதிமுக. கட்சிகளின் அதிருப்தியாளர்கள் ஆதரவு கிடைத்தால் அதுசாதகமாக அமையும்.. மு.க. அழகிரி ஆதரவளித்தால் அதை ஏற்போம் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் தேமுதிக., பாமக., மதிமுக, இந்திய ஜனநாயக கட்சி, கொங்கு நாடு முன்னேற்ற கழகம் மற்றும் சிலகட்சிகளுடன் கூட்டணி அமைத்த பின்பு மாநிலத்தில் நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது. தற்போது அதிமுக. ஒருதுருவமாகவும், திமுக. இன்னொரு துருவமாகவும், மூன்றாவது முக்கியதுருவமாக பா.ஜ.க.,வும் போட்டியிடுகின்றன.
தமிழக மக்களும், மத்தியில் காங்கிரசுக்கு உண்மையான மாற்றாக பாஜக.,வை பார்க்கின்றனர். தமிழகத்தில் போட்டி என்பது 3 அணிக்கும் சமமாகவே இருக்கும். இத்தேர்தலில் திமுக.வை ஆட்சி மாற்றம் நிகழ்த்தும் கட்சியாக தமிழகமக்கள் பார்க்கவில்லை.
அது பலவீனமான கட்சியாகவே இருக்கிறது. தேர்தலுக்கு பின்பு அதிமுக. அல்லது திமுக.வுடன் பா.ஜ.க.,வுக்கு உறவு ஏற்படுமா? என்ற கேள்வியை இப்போது விவாதிப்பது சரியல்ல. நிச்சயம் பா.ஜ.க கூட்டணி தேர்தலில் ஆட்சி அமைக்கும் வகையில் எம்பி.க்களை பெறும். தேர்தலுக்குமுன்பு நமக்கு ஆட்சியமைக்க தேவைப்படும் வெற்றி கிடைக்குமா? என்பது குறித்து நாங்கள் விவாதித்தோம். ஆனால் தற்போது நிலையில் பாஜக கூட்டணியால் நிச்சயம் ஆட்சியமைக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
எனவே தேர்தலுக்கு பின் வேறுயாருடனும் கூட்டணி அமைக்கத்தேவை இருக்காது. திமுக., அதிமுக. கட்சிகளின் அதிருப்தியாளர்கள் ஆதரவு கிடைத்தால் அதுசாதகமாக அமையும். முக.அழகிரியின் ஆதரவு கிடைத்தால் அதனை வரவேற்போம். அது நாங்கள் ஆட்சியமைக்க உதவும் இவ்வாறு முரளிதர் ராவ் கூறினார்.
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
Leave a Reply
You must be logged in to post a comment.