என் நண்பர் விஜயகாந்த் அற்புதமானவர் பிரேமலதா காணொளியால் நெகிழ்ந்த மோடி

விஜயகாந்த் அற்புதமானவர் என புகழ்ந்து, அவருடன் நீண்டகால நெருக்கம் மற்றும் சமூக நன்மைக்காக இணைந்து பணியாற்றியதைக் குறிப்பிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் நரேந்திர மோடி அரசியலைத் தாண்டி தனக்கு சகோதரர் போன்றவர் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு காணொளியை பகிர்ந்துள்ள பிரேமலதா விஜயகாந்த், அந்தக் காணொளியில், விஜயகாந்தின் உடல்நலம் குறித்து பிரதமர் கேட்டறிந்ததாகவும், பிரதமர் மோடி சிறந்த தலைவராக விளங்குவதாகவும் பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடிக்கும் அவருக்கும் இடையில் இருந்த உறவு, அரசியலைத் தாண்டிய ஒன்று. ‘தமிழகத்தின் சிங்கம்’ என்று அன்பாக அழைப்பதோடு, அவரது உடல்நலக் குறைபாடுகள் போது ஒரு சகோதரரைப் போல கவலைப்பட்டு, அடிக்கடி தொடர்புகொள்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2014 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக அங்கம் வகித்தது. 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 2 தொகுதிகளில் வென்றது. அப்போது, பாஜகவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர் விஜயகாந்த் என்று பிரதமர் மோடியே பாராட்டினார். 2019 மக்களவைத் தேர்தலிலும் அதிமுக – பாஜக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றிருந்தது. எனினும் பாஜக கூட்டணியில் அதிமுக மட்டும் 1 இடத்தில் வென்றிருந்தது. 2021 சட்டசபை தேர்தலில் தேமுதிக, டிடிவி தினகரனின் அமமுக உடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக. இதற்கிடையே தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2023 டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். விஜயகாந்துக்கு அவரது மறைவுக்குப் பிறகு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.

தற்போது சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்கும் முனைப்பில் அமித்ஷா ஈடுபட்டு வருகிறார். அதன் முதல் கட்டமாக அதிமுக – பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பாமக, தேமுதிகவை தங்கள் அணிக்கு கொண்டு வரும் முயற்சிகளையும் பாஜக மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடியை பாராட்டி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், கேப்டன் விஜயகாந்த் திரையுலகத்திலும், அரசியலிலும் உயர்ந்த ஒரு ஆளுமை மட்டுமல்ல, பலருடைய அன்பையும் மரியாதையையும் பெற்ற ஒரு மனிதர்.

பிரதமர் நரேந்திர மோடிக்கும் விஜயகாந்துக்கும் இடையில் இருந்த உறவு, அரசியலைத் தாண்டிய ஒன்று. விஜயகாந்த் பிறந்தநாளின் போது அவருக்கு பிரதமர் அழைத்து வாழ்த்து சொல்வார். ‘தமிழகத்தின் சிங்கம்’ என்று அன்பாக அழைப்பதோடு, அவரது உடல்நலக் குறைபாடுகள் போது ஒரு சகோதரரைப் போல கவலைப்பட்டு, அடிக்கடி தொடர்புகொள்வார்.

இந்த உலகத்தின் எந்த இடத்தில் என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று சொன்னார். நான் உங்கள் மூத்த சகோதரனைப் போல என்று மோடி சொன்னதை எனது வாழ்க்கையில் நான் மறக்க மாட்டேன். விஜயகாந்த் – பிரதமர் மோடி நட்பு பரஸ்பர மரியாதையிலும் அன்பிலும் கட்டப்பட்ட, மிகவும் அரிதான ஒன்று” என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நர ...

ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ...

அடுத்த தேர்தலில் தோல்வியடைந்த ...

அடுத்த தேர்தலில் தோல்வியடைந்தால் தி.மு.க., ஆட்சி என்பதே இருக்காது: நயினார் நாகேந்திரன் ஆரூடம் “வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்தி விட்டால், இனி ...

நாட்டின் பாரம்பரியத்தை பிரதிப ...

நாட்டின்  பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சேனல் தூர்தர்ஷன் – மத்திய இணை அமைச்சர் ''நாட்டின் பொருளாதாரத்தில், படைப்பு பொருளாதாரம் முக்கிய பங்காற்றுகிறது,'' என, ...

போதை பொருள் விற்பனையில் தமிழகம ...

போதை பொருள் விற்பனையில்  தமிழகம் முதலிடம் – எ ச் ராஜா தமிழகத்தில் அதிக அளவில் போதைப்பொருள் விற்பனையாகிறது. கஞ்சா மூடைகள் ...

2026 தேர்தலில் திமுக அவுட் ஆப் கன் ...

2026 தேர்தலில் திமுக அவுட் ஆப் கன்ட்ரோல் – நயினார் நாகேந்திரன் ''2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., தமிழகத்தில் இருந்து அவுட் ...

குற்றங்களை மூடி மறைக்கும் திமு ...

குற்றங்களை மூடி மறைக்கும் திமுக அரசு – அண்ணாமலை குற்றச்சாட்டு பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சுத்தமான குடிநீரைக் கூட வழங்க ...

மருத்துவ செய்திகள்

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...