அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றுள்ளேன் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
டெல்லி மேல்–சபை எம்.பி.யாக இருப்பவர், ஸ்மிரிதி இரானி. இவர், அண்மையில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் அமேதிதொகுதியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 38 வயது ஸ்மிரிதி இரானிக்கு பா.ஜ.க.,வின் மந்திரிசபையில் மனிதவள மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டது.
இதனையடுத்து இதுதொடர்பாக டுவிட்டரில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜய் மக்கான் விமர்சித்து இருந்தார். அதில், ”மோடியின் மந்திரிசபை என்ன மாதிரியாக இருக்கிறது? ஸ்மிரிதி இரானி பட்டதாரிகூட கிடையாது. அவர், மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார் என்றார்
இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிருதி இராணி; நான் படிப்பறிவு இல்லாதவள் என சிலர் என்னை விமர்சனம் செய்கிறார்கள். நான் யேல் பல்கலைக் கழத்தில் பட்டம் பெற்றுள்ளேன். எனது தலைமைப் பண்பை யேல்பல்கலைக் கழகம் பாராட்டியுள்ளது.
எனது வேட்பு மனுக்கள் குறித்து நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தால் கவலைப்பட மாட்டேன். நீதிமன்றத்தில் உரியபதிலை அளிப்பேன். நான் எவ்வாறு செயல்படுகிரேன் என்பதை கணியுங்கள். பின்னர் என்னை மதிப்பிட்டு விமர்சனம்செய்யலாம். என்று கூறியுள்ளார்.
யேல் பல்கலைக்கழகத்தில் அவர் எந்தத்துறையில் பட்டப் படிப்பு முடித்தார் என்பது குறித்து இரானி எதுவும் தெரிவிக்கவில்லை. கடந்த ஆண்டு 11 இந்திய எம்பி.க்கள் யேல் பல்கலை கழகத்தில் தலைமைப்பண்பு குறித்த படிப்பை மேற்கொண்டனர். அதில் ஸ்மிருதி இரானியும் ஒருவர். அதைத்தான் அவர் குறிப்பிட்டுள்ளார் என கூறப்படுகிறது.
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.