‘ஹஜ் பயணம் செல்வோர், விண்ணப்பபடிவங்களை இலவசமாக பெற்று கொள்வதற்கான அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.
முஸ்லிம்கள் அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில், அனைத்து வசதிகளையும் செய்துதந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி’ என, இந்திய ஹஜ்அசோசியேஷன் தலைவர் ‘பிரசிடென்ட்’ அபூபக்கர் தெரிவித்துள்ளார்
இந்தாண்டு ஹஜ் புனிதபயணம் மேற்கொள்ளும் பயணியருக்கான புறப் பாட்டு இடங்கள், 10ல் இருந்து 25 ஆக உயர்த்தி, மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட் டுள்ளது.
ஹஜ் பயணம் செல்வோர், விண்ணப்ப படிவங்களை எவ்வித கட்டணமும் இல்லாமல், இலவசமாக பெற்றுகொள்வதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் புனித பயணத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளும், அவர்களுக்கான பொருளாதார விலக்கும் அளிக்கப் படுகிறது.
இதற்கு முன், ஒருகுறிப்பிட்ட தொகையை ஹஜ் பயணம் மேற்கொள்வோர் முன் கூட்டியே செலுத்த வேண்டும். தற்போது போர்வை, குடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை, அவர்களே சொந்தமாக எடுத்து வருவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதனால், ஒவ்வொரு பயணிக்கும் 50 ஆயிரம் ரூபாய் செலவுமிச்சம். மேலும், முன்கூட்டியே செலுத்த வேண்டிய வைப்பு தொகை குறைக்கப் பட்டுள்ளது. இதனால், 36 கோடி முஸ்லிம்கள் பயன்பெறுவர்.
விண்ணப்பம் இலவசம், வைப்புதொகை குறைப்பு, பயண ரீதியான உதவிகள் ஆகிய அனைத்தையும் மத்தியஅரசு செய்திருக்கிறது. இதற்கான உத்தரவை, மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஹஜ் பயணம்செல்வோர் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள, தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளன. தங்கும் வசதி உள்ளிட்ட அடிப்படைவசதிகள் குறித்து, மத்திய அரசு, சவுதி அரசுடன் பேச்சு நடத்திஇருக்கிறது.
இதுகுறித்து, மத்திய விமான போக்குவரத்து துறை, மத்திய சுகாதாரதுறை, மாநில ஹஜ் கமிட்டி, இந்திய ஹஜ் கமிட்டி, வெளியுறவு துறை அமைச்சகம், சிறுபான்மை நலத் துறை அமைச்சகம் ஆகியவற்றுடன் கூட்டுபேச்சும் நடந்துள்ளது. ‘ஆன்லைன்’ வாயிலாக, இனி அனைவரும் எளிதாக விண்ணப்பிக்கலாம்.
பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் ஆகியோருக்கு கூடுதல்வசதி செய்துதர முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.
இதற்கான ஒப்புதலை, மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்துப் பூர்வமாக, லோக்சபாவில் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்கள் அனைவரும் மகிழ்ச்சி அடையும்வகையில், அனைத்து வசதிகளையும் செய்துதந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்திய ஹஜ் அசோசியேஷன் சார்பில் நன்றி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |