மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மத்திய அமைச்சர்கள் வெங்கய்யநாயுடு மற்றும் நிதின் கட்கரியுடன் ஆலோசனை நடத்தினார்.
வெங்கய்ய நாயுடு.,வுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேட்ஸ், பிரதமர் மோடி தலைமையிலான அரசில் உள்ள அமைச்சர்கள் மக்களுக்கு மிகச்சிறந்த சுகாதார வசதியை அளிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர் . அனைத்து மக்களுக்கும் சுகாதாரவசதியை அளிப்பதற்காக புதிய அணுகு முறையை வகுப்பதோடு அதுகுறித்த விழிப்புணர்வை உருவாக்க வேண்டியது குறித்து ஆலோசிக்கப்பட்டது புதியதொழில் நுட்பத்தை அளிப்பதில் அரசுடன் இணைந்து செயல்படுவதற்கு தாங்கள் தயாராக உள்ளோம்.
அரசுடனான எங்களது கூட்டணி மிகவும் வலுவானது. மக்களுக்கு கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தருவதற்கு முன்பாக அவர்களின் செயல் பாடுகளில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியது மிகவும் அவசியம் என்றார்.
இதுகுறித்து வெங்கய்ய நாயுடு கூறியது: இந்தியாவில் பில் மற்றும் மிலிண்டா கேட்ஸ் அறக் கட்டளை மிகப்பெரிய அளவில் தொண்டுப் பணிகளில் ஈடுபட்டுவருகிறது. இதை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினோம். அனைவருக்கும் சுகாதாரவசதியை அளிப்பது தொடர்பாக புதியவழிமுறைகள் குறித்து இந்தக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட விஷயங்களும் ஆராயப்பட்டது என்றார் நாயுடு.
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
Leave a Reply
You must be logged in to post a comment.