வேம்புவின் மருத்துவக் குணம்

 நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் 1 ஸ்பூன் அளவு பருகிவர தேமல், முகப்பரு மற்றும் தோல் வியாதிகள் நீங்கும்.

வயிற்றுவலி நீங்க
வேப்பிலையையையும் சீரகத்தையும் சேர்த்து நன்றாக அம்மியில் வைத்து அரைத்து சாறு எடுத்து அவற்றுடன தேவையான அளவு சர்க்கரையைச் சேர்த்து, 1 முதல் 1 ¼ அவுன்சு வரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகிவர வேண்டும். இவ்விதம் கடைபிடிக்க வயிற்றுவலி தீரும்.

இடுப்புப் புண் உடலில் ஏற்படும் சிராய்ப்புகள்
இடுப்புப்புண் பெரும்பாலும் பெண்களுக்கே வரும், இடுப்பில் ஆடைகளை இறுக்கமாகக் காட்டுவதாலேயே இடுப்புப்புண் வருகிறது. இதனைத் தவிர்க்க, எப்பொழுதும் ஆடைகளைத் தளர்த்தியே உடுத்துதல் வேண்டும். இடுப்புப் புண் இருப்பின்;

வேப்பிலை, மஞ்சள், கடுக்காய் மூன்றையும் சம அளவில் எடுத்து, இத்துடன் வெங்காயச்சாறு அல்லது எலுமிச்சைச் சாறு விட்டு அரைத்து படுக்கைக்குச் செல்லுமுன் இடுப்பில் பூசுதல் வேண்டும்.

காலையில் எழுந்ததும் கடலைமாவு அல்லது பாசிப்பயறு மாவு இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தலையில் தேய்த்துக் குளித்தல் வேண்டும். குளித்தபின் ஈரமின்றித்துடைத்து விட்டு இறுக்கமின்றி உடை உடுத்தி வர விரைவிலேயே இடுப்புப்புண் ஆறும்.

பித்த வெடிப்பு
வேப்பிலையையும் மஞ்சளையும் மருதாணியையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து, பித்தம் காரணமாகக் கால்களில் வெடிப்பு தோன்றும்போது காலை நன்றாக வெந்நீரில் கழுவி, தூய துணியால் துடைத்தபின், வெடிப்பு உள்ள இடத்தில் தொடர்ந்து போட்டு வருதல் வேண்டும். இவ்வாறு செய்துவர விரைவில் பித்த வெடிப்பு மறையும்.

வேப்பிலையையும், வேலிப்பருத்தியையும்(உத்தாமணி) சமஅளவு எடுத்து, இரண்டையும் சேர்த்து அம்ம்மியில் வைத்து முழங்கால் வாதம் உள்ள இடத்தில் பற்றாகப் போட வேண்டும். இம்முறையில் தொடர்ந்து மூன்று நாட்கள் போட்டுவர முழங்கால் கனுவாதம் வலி நீங்கும்.

பைத்தியம் தெளிய
புத்திசுவாதீனத்தைப் போக்க தொடக்கத்திலிருந்தே வேப்பிலையை தினசரி காலையில் சாப்பிட்டு வர புத்தி தெளியும்.

சொறி, சிரங்கு
நம்மிடையே சிலர் சொறி சிரங்கள் இன்னலுருவதைக் காணலாம். சொறி சிரங்கு தொல்லையிலிருந்து பூரணம் குணம் பெற வேப்பிலையையும் வெங்காயத்தையும் ஒன்றாக அம்மியில் வைத்து அரைத்து சொறி சிரங்கு உள்ள இடத்தின் மேல் தடவுதல் வேண்டும். இம்முறையை ஓரிரு நாட்களுக்குச் செய்துவர சொறி சிரங்கு மறையும்.

அம்மை நோய்
அம்மை நோய்க்கு வேப்பிலை ஒரு சக்தி மிகுந்த கிருமி நாசினி ஆகும். வேப்பிலையையைத் தரையில் பரப்பி அம்மை வார்த்தவர்களைப் படுக்க வைத்தல் நலம்.

அம்மை வார்த்து பதினைந்து நாள் சென்றபின் தலைக்குத் தண்ணீர் விடுதல் வழக்கம். வேப்பிலை, அருகம்புல், மஞ்சள், துளசி இவற்றை மைபோல் அரைத்து உடம்பில் பூசியபின், வேப்பிலை போட்டுச் சுடவைத்த தண்ணீரை நன்கு குளிர வைத்தபின், குளித்தல் வேண்டும்.

அம்மை இறங்கியபின் அம்மைப் புண் இருந்தால், வேப்பங் கொழுந்தையும், மஞ்சளையும் சமமாக எடுத்து மைபோல அரைத்துக் கொண்டு, இதை உடம்பில் பூசுதல் வேண்டும். சிறிது நேரம் சென்ற பின் தயிராய் உடல்மேலெல்லாம் தேய்த்து ½ மணிநேரம் ஊற விடுதல் வேண்டும்.

முன்பு சொன்னது போலவே ½ மணிநேரம் சென்ற பின், வேப்பிலையில் சுடவைத்த நீரைக் குளிரச்செய்து குளித்தல் வேண்டும். இவ்வாறு செய்துவர அம்மை நீங்கும். இதனால் ஏற்பட்ட புண்ணும் மறையும்.

தூக்கமின்மைக்கு
இன்று பலர் தூக்கம் இன்மையால் அவதியுருவதைக் காண்கிறோம். தூக்கமின்மையைப் போக்கி, அமைதியான நித்திரை பெற்றிட வேப்பிலைச்சாறு ¼ அவுன்சு, தண்ணீர் 3 அவுன்ஸ், எலுமிச்சைச்சாறு ¼ அவுன்சு சேர்த்து கலந்து, படுக்கைக்குச் செல்ல 1 மணி நேரத்திற்கு முன் அருந்த நல்ல தூக்கம் வரும்.

அஜீரணம்
உண்ண உணவில்லையே என்று ஒரு பகுதி மக்கள் ஏங்க, உணவு ஜீரணம் ஆகவில்லையே என மறுபகுதி மக்கள் கவலைப்படுகின்றனர்.

அஜீரணம் நீங்க
வேப்பிலையைச் சுத்தம் செய்து நிழலில் உலர்த்திப் பொடி செய்து கொண்டு இவற்றோடு சீரகம், மிளகு, உப்பு சேர்த்து காலை மாலை இருவேளையும் சாப்பாட்டுடன் சாப்பிட அஜீரணம் நீங்கும்.

மலச்சிக்கல்
வேப்பிலையை நன்கு அரைத்து சாறு எடுத்துக் கொண்டு இதனுடன் உப்பையும், சர்க்கரையும் சேர்த்து, படுக்கைக்குச் செல்லுமுன் ½ அவுன்சு முதல் 1 அவுன்சு வரை சாப்பிட மலச்சிக்கல் நீங்கும்.

மூக்கில் இரத்தம் கசிதல்
வேப்பிலையையையும் ஓமத்தையும் சம எடையாக எடுத்து அரைத்து, நெற்றிப் பொட்டின் மேல் பற்றுப் போட்டால் மூக்கில் இரத்தம் வருவது நிற்கும்.

நீரிழிவு நோய்
வேப்பிலையை நிழலில் நன்றாக உலர்த்தவும், ஓமம், சுக்கு, உப்பு, பனைவெல்லம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, வேப்பிலையுடன் சேர்த்து பொடி செய்து கொள்ளவும். இரவு படுக்கைக்குச் செல்லும் முன் இப்பொடியில் சிறிது எடுத்துப் பாலில் கலந்து சாப்பிடுதல் வேண்டும்.

வேப்பிலைத்தூள் மூன்று பாகம், கடுக்காய்த்தூள் ஒரு பாகம். தனியாத்தூள் இரண்டு பாகம் இவற்றை ஒன்றாக கலந்து, ஒரு தேக்கரண்டி அளவு தினம் காலையில் வாயில் இட்டு நீர் பருகவும். ஒரு மணி நேரம் சென்றபின் ஆகாரம் சாப்பிடலாம். சாப்பிட்டபின் கால் ஆற நடத்தல் நலம் பயக்கும்.

கொசுக் கடிக்கு மலேரியா காய்ச்சல் கொசுக்கடிகளினாலேயே ஏற்படுகிறது. மலேரியா நோய் பரவுவதைத் தடுக்க கொசுக்களை அழிக்க வேண்டும். அல்லது கொசுக்கள் கடிக்காமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

நெடுநாள் சென்ற மடிந்த பழங்கூரை வைக்கோலையும், காய்ந்த வேப்ப இலையையும் சேர்த்து இடித்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். கொசு உள்ள இடங்களில் தீயிட்டு பொடியை எரிக்க இதிலிருந்து எழும் புகையால் கொசுக்கள் மடியும்.

வேப்பிலையையும் மஞ்சளையும் சேர்த்து அரைத்து நீரில் கரைத்து படுக்கைக்குச் செல்லுமுன் உடம்பில் பூசிக் கொள்ள வேண்டும். அங்ஙனம் பூசினால் கொசு கடிக்காது.
நன்கு காய்ந்த பழைய வேப்பம் பூவை 5 கிராம் அளவு எடுத்து 50 மி.லி குடிநீர்விட்டு மூடி வைத்திருந்து வடிகட்டிச் சாப்பிட்டு வரப்பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கி கல்லீரல் நன்கு செயல்படும்.

வேப்பங்கொழுந்து 20 கிராம், ஈர்க்கு 10 கிராம், 4 கடுக்காய்த்தோல் இவற்றை பிரண்டைசாறு விட்டரைத்து 15 மி.லி விளக்கெண்ணெய் கலந்து கொடுக்க குடல்பூச்சி வெளியாகும்.

ஐம்பது ஆண்டுகளுக்கு மேற்பட்டு முதிர்ந்த வேம்பின் வேர்ப்படைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டை பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக்கூட்டி காலை, மாலை நீண்ட நாட்கள் சாப்பிட்டுவரத் தொழுநோய் முதலான அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும்.

வேப்பிலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துத் தடவி வர பித்தவெடிப்பு, கட்டி, பருவு, அம்மைக் கொப்புளம் குணமாகும்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் எந்த மாநிலத்தையும ...

பட்ஜெட்டில் எந்த மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை நிர்மலா சீதாராமன் பதிலடி மத்திய பட்ஜெட்டில் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளது'' என ...

அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வர ...

அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் சென்னை -பெங்களூர் விரைவுச்சாலை சென்னை – பெங்களூரு விரைவுச் சாலைப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ...

தமிழக ரயில் திட்டங்களுக்கு பட் ...

தமிழக ரயில் திட்டங்களுக்கு பட்ஜெட் ஒதுக்கீடு தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில்  இந்த ஆண்டு ...

மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும ...

மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் முறையை ஒழித்தல் நாட்டின் எந்த மாவட்டத்திலும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் ...

பசுமை நெடுஞ்சாலை திட்டம்

பசுமை நெடுஞ்சாலை திட்டம் நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளை பசுமை நெடுஞ்சாலைகளாக மாற்றும் ...

2024-25 -ம் ஆண்டு பட்ஜெட் -அமித் ஷா பா ...

2024-25 -ம் ஆண்டு  பட்ஜெட் -அமித் ஷா பாராட்டு 2024-25-ம் ஆண்டு மத்திய பட்ஜெட், மக்கள் நலனையும், வளர்ச்சியையும் அடிப்படையாக கொண்டுள்ளதென மத்திய ...

மருத்துவ செய்திகள்

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...