டாஸ்மாக் இல்லாத தமிழகம், லஞ்ச லாவண்யம் இல்லாத தமிழகம், மின்வெட்டில்லாத தமிழகம், மலர இந்தப் பொங்கல் வழிவகுக்கட்டும்

 மத்தியில் நம் மோதியின் தலைமையில் அமைந்துள்ள நல்லாட்சி பீடுநடை போட்டு வருகிறது. வங்கி கணக்கு இல்லாதவர்கட்கெல்லாம் வங்கிக்கணக்கு துவங்க 'மக்கள் நிதி திட்டம்' சமையல் எரிவாயுவுக்கான மானியம் மக்களுக்கு நேரடியாக வழங்கும் திட்டம், நாட்டில் தூய்மை பற்றிய விழிப்புணர்வும் லஞ்சம் ஒழிப்புணர்வும் ஏற்படுத்தும் திட்டம் போன்ற

பல்வேறு மக்கள் நலத்திட்டங்களால் இந்த ஆட்சி மக்களின் வாழ்க்கையில் இன்பம் பொங்கும் ஆட்சியாகவும் மகிழ்ச்சி தங்கும் ஆட்சியாகவும் எங்கும் நல்லாட்சி மிளிரும் ஒரு சிறந்த ஆட்சியாகவும் ஒரு புதிய சூழ்நிலையை பாரத தேசத்தில் பதிய வைத்திருக்கிறது.

லஞ்சம், ஊழல், கடன் கருப்புபணம், வேலைவாய்பின்மை போன்ற பழையனவைகள் கழிந்து வேலை வாய்ப்பு, நேரடி மானியம், தூய்மை, வாய்மை, பசுமை, மகிழ்ச்சி போன்ற புதியன புகும் ஒரு புதிய பொங்கலாக இப்பொங்கல் மலர்ந்துள்ளது.

ஆரம்பத்திலேயே ஏற்பட்ட இந்த மகிழ்ச்சி இன்னும் போகப் போக பாரத தேசத்தில் ஓங்கி வளரும் உயர்ச்சியளிக்கும் முயற்சியில் நம் அரசு முனைந்துள்ளது. அதே நல்ல சூழ்நிலை தமிழகத்திலும் நிலவ, ஒரு டாஸ்மாக் இல்லாத தமிழகம், லஞ்ச லாவண்யம் இல்லாத தமிழகம், மின்வெட்டில்லாத தமிழகம், அடிப்படை கட்டமைப்புக்கள் உள்ள தமிழகம் மலர இந்தப் பொங்கல் வழிவகுக்கட்டும்.

இந்தப்பொங்கல் நம் தமிழர்களின் வாழ்க்கையிலும், இலங்கையில் வாழும் தமிழர்கள் வாழ்க்கையிலும் இன்பம் பொங்கும் பொங்கலாக அமையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

கட்டுண்ட ஜல்லிக்கட்டும் நாம் மேற்கொண்டுள்ள முயற்சியினால் கட்டவிழ்க்கப்பட்டு, கட்டுடல் காளைகளும் காளையும் கலாச்சார பொலிவுடன் விளையாடும் பொங்கலாகவும் இப்பொங்கல் அமையும் என்று நம்புவோமாக.

தமிழகத்தில் உள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாநில தலைவர். டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...