தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியா பிரகாசிக்கும் -மோடி பெருமிதம்

‘தூய்மை இந்தியா திட்டம் எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறதோ அந்த அளவுக்கு நம் நாடு பிரகாசிக்கும்’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.

தூய்மை இந்தியா திட்டம், துவங்கப்பட்டு, 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: தொடர் முயற்சியால் மட்டுமே நமது இந்தியாவை தூய்மையாக மாற்ற முடியும். ஸ்வச் பாரத் இயக்கத்தின் வெற்றி நமது ஒற்றுமை மற்றும் கூட்டு முயற்சியின் விளைவாகும். அம்ருத் திட்டத்தில் நாட்டின் பல்வேறு நகரங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்படும். ஸ்வச் பாரத் திட்டத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வேன்.

தூய்மை இந்தியா திட்டம் எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறதோ அந்த அளவுக்கு நம்நாடு பிரகாசிக்கும். தூய்மை இந்தியா திட்டம் மூலம் ஆண்டுதோறும் 70 ஆயிரம் குழந்தைகளின் உயிர்கள் காக்கப்படுகின்றன. குழந்தைகளின் உயிர்கள் காக்கப்படுவதாக சர்வதேச பல்கலை., விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர்.

இந்த நூற்றாண்டில் உலகின் மிகப்பெரிய வெற்றிகரமான மக்கள் பங்கேற்பு இயக்கம் தூய்மை இந்தியா. பள்ளிகளில் தனி கழிப்பறை கட்டியதால் பெண்கள் அதிகமாக கல்வி கற்கின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

தூய்மை இந்தியா திட்டம் குறித்து, சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ‘எனது இளம் நண்பர்களுடன் சேர்ந்து களப்பணியாற்றினேன். இன்று அனைவரும் சுற்றுப்பகுதியில் தூய்மைப் பிரசாரம் மேற்கொள்ள அழைக்கிறேன். இந்த முயற்சி தூய்மை இந்தியா திட்டத்தை மேலும் வலுப்படுத்தும்’ என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இது குறித்து, அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘காந்தியின் மரியாதைக்குரிய பிறந்தநாளில் அனைத்து நாட்டு மக்கள் சார்பாக அவருக்கு மரியாதை செலுத்துகிறோம்.

உண்மை, நல்லிணக்கம் மற்றும் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அவரது வாழ்க்கை மற்றும் லட்சியங்கள் எப்போதும் நாட்டு மக்களுக்கு உத்வேகமாக இருக்கும்’ என குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...