உலகளாவிய சிக்கல்களுக்கு இடையிலும் இந்தியா விரைந்து வளர்ச்சியடைகிறது

2023-24 –ம் ஆண்டுக்கான நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீட்டை நித்தி ஆயோக் வெளியிட்டுள்ளது. இதில் உலகளாவிய சிக்கல்களுக்கு இடையிலும்  இந்தியா விரைந்து வளர்ச்சியடைவது தெரியவந்துள்ளது.

வறுமை ஒழிப்பு, கண்ணியமான வேலை, பொருளாதார வளர்ச்சி, பருவநிலை நடவடிக்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற இலக்குகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இந்தியா அடைந்துள்ளது.

பிரதமரின் வீட்டுவசதித் திட்டம், இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம், தூய்மை இந்தியா, ஜன் தன் வங்கிக் கணக்குத் திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம், பிரதமரின் முத்ரா கடன் திட்டம், ஸ்டார்ட்-அப் இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்களும், இயக்கங்களும் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதுடன் விரைவான முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளன.

அனைத்து மாநிலங்களுமே ஒட்டுமொத்த மதிப்பீடுகளில் முன்னேற்றம் கண்டுள்ளன

நாட்டின் ஒட்டுமொத்த நிலையான வளர்ச்சி குறியீட்டு மதிப்பீடு 2023-24 -ம் ஆண்டில் 71 ஆக உள்ளது, இது 2020-21-ம் ஆண்டில் 66 ஆகவும், 2018-ம் ஆண்டில் 57 ஆகவும் இருந்தது.

2023-24-ம் ஆண்டில் மாநிலங்களுக்கான மதிப்பீடு குறைந்தபட்சம் 57 முதல்  அதிகபட்சம் 79 வரை உள்ளது. இது 2018-ம் ஆண்டில் இது 42 முதல் 69 வரை இருந்தது.

2018-ம் ஆண்டுக்கும் 2023-24-ம் ஆண்டுக்கும் இடையில், வேகமாக  வளர்ச்சியடையும் மாநிலங்கள் பட்டியலில் உத்தரபிரதேசம் 25 மதிப்பீடு அதிகரித்து முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து ஜம்மு – காஷ்மீர் 21 மதிப்பீடும், உத்தராகண்ட் 19 மதிப்பீடும், சிக்கிம் 18 மதிப்பீடும், ஹரியானா 17 மதிப்பீடும், அசாம், திரிபுரா, பஞ்சாப் தலா 16 மதிப்பீடும், மத்தியப் பிரதேசம், ஒடிசா தலா 15 மதிப்பீடும் அதிகரித்துள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உரு ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உருவாக்க உழைக்கும் அனைவருக்கும் நன்றி” – பிரதமர் மோடி உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) தொடங்கப்பட்ட உலக சுகாதார ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே எங்களது தாரக மந்திரம்: பாஜக 47-வது நிறுவன தினத்தில் பிரதமர் மோடி பெருமிதம் ​பாஜக​வின் 47-வது நிறுவன நாளை முன்​னிட்​டு, நாடு முழு​வதும் ...

மருத்துவ செய்திகள்

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...