இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ஈரல்நோய்கள், இடுப்புவலி முதலிய நோய்களைக் கண்டித்து தாதுவைப் பலப்படுத்தும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பை உறுப்புகளின் நோய்களைக் குணமாக்கும். ஆனால் கபத்தை உண்டுபண்ணும், பித்தத்தைக் குறைக்கும். மந்தத்தை உண்டு பண்ணும். வாயு அதிகரிக்கும்.
உளுந்தைப் பொன் வறுவலாக வறுத்து அரைத்து வெந்நீரில் கரைத்து காலை, மாலை உண்டுவர குன்மவியாதிகள் சாந்தமாகும். இதனால் செய்த உணவுப்பொருள்கள் பலவீன முள்ளவருக்கும், மெலிந்த தேகம், உள்ளவர்களுக்கும் மிகவும் சிறந்தது. உளுந்தில் கொடுக்கப்படுகிற எண்ணெய் வாதநோய்கள் முடக்குவாதம் முதலிய நோய் உள்ள இடத்தில் தேய்த்து வர இந்நோய்கள் குணமாகும்.
இதன் செடி வேரை அரைத்து சூடாக்கி வீக்கங்களுக்கு வைத்துக் கட்ட சுகம் தெரியும். சாதாரணமாக உளுந்தை சேர்த்து அரைத்து இட்லி செய்தும், தனியாக அரைத்து வடை செய்தும் அதிகம் சாப்பிடுவதனால் வாதம் அதிகரிக்கும். பித்தம் சிறிது அடங்கும். கஞ்சியாக செய்து அருந்துவதால் பசியைப் போக்கும். தீபனம் உண்டாக்கும்.
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.