எதிர்கட்சிகளுக்கு ஜனநாயக ரீதியாக போராட அனுமதி இல்லை – பாஜக தலைவர் கண்டனம்

‘எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயக ரீதியாகப் போராடுவதற்கு, அனுமதி இல்லை, ஆனால் தி.மு.க.,வின் வீண் போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது’ என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பா.ம.க., நிறுவனர் அன்புமணி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை கண்டித்து, பா.ஜ., அ.தி.மு.க., மற்றும் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது தடையை மீறி போராட்டம் நடத்தியதாக கூறி அவர்களை போலீசார் கைது செய்து விடுவித்தனர். இதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், சட்டசபையை கவர்னர் ரவி அவமதித்ததாக கூறி, இன்று (ஜன.,07) தமிழகம் முழுவதும் தி.மு.க., வினர் போராட்டம் நடத்தினர். இதற்கு போலீசார் அனுமதி கொடுத்தது எப்படி என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

தமிழக பா.ஜ., தலைவர், அண்ணாமலை

எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயக ரீதியாகப் போராடுவதற்கு, அனுமதி இல்லை, ஆனால் திமுகவின் வீண் போராட்டங்களுக்கு அனுமதி உண்டு. ஜனநாயக ரீதியாக, சுவரொட்டிகள் மூலமாகக் கூட எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க அனுமதி இல்லை, ஆனால், கவர்னரையும், எதிர்க்கட்சிகளையும் வசைபாடும் சுவரொட்டிகளுக்கு மட்டும் அனுமதி உண்டு.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு தி.மு.க., பாலியல் குற்றவாளிகளிடம் இருந்து பாதுகாப்பின்மை என, தமிழகம் முழுவதும் திமுகவினர் குற்றங்கள் செய்து கொண்டிருக்க, போலீசார், சுவரொட்டி ஒட்டும் திமுகவினருக்குப் பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறது. தி.மு.க., ஆட்சியில் தமிழகம், அறிவிக்கப்படாத அவசர நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. விரைவில் மக்கள் இந்த கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவுரை எழுதுவார்கள்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...