மருத்துவ வல்லுநர்களுக்கு டைம்ஸ் நவ் நிறுவனத்தின் மருத்துவ விருதுகளை டாக்டர் ஜிதேந்திர சிங் வழங்கினார்

நாட்டின் பல்வேறு பகுதகளைச் சேர்ந்த புகழ்பெற்ற மருத்துவ வல்லுநர்களுக்கு “டைம்ஸ் நவ்”  நிறுவனத்தின் மருத்தவ  விருதுகளை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புதுதில்லியில் நேற்று  (29.06.2024) வழங்கினார். இந்தியாவில்  ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு “டைம்ஸ் நவ்” ஊடகக்குழுமம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விருதுகளை வழங்கிப் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், இளம் வயதினரிடையே நோய்த் தடுப்பு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை  வலியுறுத்தினார்.  நீரிழிவு நோய், இளம் வயதில் மாரடைப்பு, புற்று நோய்கள் போன்றவை அதிகரித்து வருவது சுகாதார சவால் மட்டுமின்றி, இளைஞர்ளின் சக்தியைக் குறைக்கும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகிறது என்று அவர் கூறினார். இந்த நோய்களைக் கட்டுப்படுத்துவது,  2047-ல் வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை விரைந்து அடைய உதவும் என்று அவர் கூறினார்.

கொவிட் -19 போன்ற சவாலான காலங்களில், மருத்துவர்கள் செய்த தியாகங்களை இந்தியா அங்கீகரித்து கௌரவிக்கிறது என்றும், மருத்துவர்கள் தினம் என்பது நமது மருத்துவர்களின் அயராத அர்ப்பணிப்பு மற்றும் விலைமதிப்பற்ற பங்களிப்புகளை கௌரவிக்கும் ஒரு சிறப்பு தினம் என்றும் அவர் கூறினார். நமது சமூகத்தின் ஆரோக்கியம் மற்றும் ல்வாழ்வை உறுதி செய்வதில் மருத்துவர்களின் முக்கியப் பங்கையும் அவர் எடுத்துரைத்தார்.

கடந்த பத்து ஆண்டுகளில் சுகாதாரத் துறையில் இந்தியாவின் முன்னேற்றத்தை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், குணப்படுத்தும் மருத்துவத்தில் மட்டுமின்றி, நோய்த் தடுப்பு சுகாதாரப் பராமரிப்பிலும்  உலகளாவிய முன்னணி நடாக இந்தியா மாறியுள்ளது என்றார்.

சுகாதாரப் பராமரிப்பு என்பது அலோபதி மருத்துவத்தோடு நின்றுவிடக் கூடாது என்றும் ஆயுஷ் மற்றும் பிற முறைளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.  மருத்துவர்களுக்கு சிறந்த பணி நிலைமை, தொடர்ச்சியான கல்வி, ஆராய்ச்சி வாய்ப்புகள் ஆகியவற்றை வழங்க அரசு உறுதிபூண்டுள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

மருத்துவ செய்திகள்

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.