பேச்சு, கருத்து சுதந்திர த்தை மதிக்கிறோம், மாறுபட்ட கருத்துகளை தடுப்பது எங்கள் நோக்கமல்ல என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து மத்திய அரசு கூறியுள்ளது.
சமூக வலைத் தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப் போரை கைதுசெய்யும் சட்டப் பிரிவை ரத்து செய்து சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
இது பற்றி மத்திய அரசு சார்பில் மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
முந்தைய அரசின் நிலைப் பாட்டை ஆதரிப்பது இல்லை என்று தான் நரேந்திர மோடி அரசு முடிவு செய்துள்ளது. அந்த சட்டப் பிரிவு, துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்க மிகக் கடுமையான வழிமுறைகளை கொண்டுவர விரும்புவதாகவே உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் தெரிவித்தோம். பேச்சு, கருத்து சுதந்திரத்தை நாங்கள் மதிக்கிறோம். சமூக வலைத் தளங்களில் கருத்து பரிமாற்றத்தையும் மதிக்கிறோம். மாறுபட்ட கருத்துகளையோ, விமர்சனங்களையோ தடுப்பது எங்கள் நோக்கமல்ல.
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.