கருத்து சுதந்திரவாதிகளின் கபடம் கொக்கரிப்பவர்களின் வக்கிரங்கள்

 இன்று தமிழ்நாட்டில் ஒரு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பதவியேற்ற பின் தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரம் பறிபோய்விட்டது: மதவெறி, சாதிவெறியர்களுக்கு இந்த ஆட்சி நம் ஆட்சி….. அதனால் எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்ற துணிவு வந்துவிட்டது. "பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் மதவெறியை,

சாதிவெறியைத் தூண்டிவிட்டது அரசியல் செய்கிறது"என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் தா.பாண்டியன்,ராமகிருஷ்ணன் ஆகியோர் முஸ்லிம்கள் அமைப்புகள் வரை பிரசாரம் செய்து வருகின்றன.

முதலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கருத்து சுதந்துரம், ஊடக சுதந்திரம் எப்படிபட்டது என்பதை ஆராய்வோம். 1950-ல் வெளியான ஒரு கார்ட்டூன், சென்ற இரண்டு வருடங்களுக்கு முன் மீண்டும் சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டது. அரசியல் அமைப்புச் சட்டக் குழு நத்தைபோல நகர்ந்து கொண்டிருக்கிறது. சீக்கிரம் எழுதப்படவில்லை;காலதாமதம் ஆகிறது; அதனால் அன்றைக்கு குழுத்தலைவராக இருந்த அம்பேத்கரை, நேரு சாட்டையால் அடிக்கின்ற மாதிரி ஒரு கார்ட்டூன்.

இந்த கார்ட்டூன், உண்மையிலேயே இப்போது பாடப் புத்தகத்தில் சேர்க்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சேர்க்கப்பட்டது. அதை ஹிந்துத்துவவாதிகளும் எதிர்க்கிறோம். ஏன் அன்றைக்கு பாஜக கூட அதை பாடப் புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று குரல் கொடுத்தது.

இந்த கார்ட்டூன் அம்பேத்கரை அவமதிக்கிறது, தலித்துகளைப் புண்படுத்துகிறது என்று சொல்லி திருமாவளவன் அன்று நாடளுமன்றத்தில் குரல்கொடுத்தார். பல்வேறு தலித் அமைப்புகள் போராடினர். அன்றைய மத்திய அமைச்சர் கபில் சிபில் இதற்காக மன்னிப்புக் கேட்டார். கார்ட்டூனை அனுமதித்த இருவர் பதவியிலிருந்து விலக்கப்பட்டனர் . கார்ட்டூனை வெளியிட்டது கருத்து சுதந்திரம் என்று அப்போது திருமாவளவன் சொல்லவில்லை; தலித்துகளை அவமதிக்கிறது என்று சொல்லித்தான் போராடினார்.

2008 தினமலர் இதழ்,விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்களை அவதூறாகச் சித்தரித்து ஒரு செய்தியை வெளியிட்டது. உடனே விடுதலைச் சிறுத்தை கட்சிகாரர்கள் தினமலர் இதழ் அலுவலகத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டார்கள். அங்கிருந்த பல பொருட்களை அடித்து நொறுக்கினார்கள். காவலாளிகள் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். தினமலர் வெளியிட்டது. கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம் என்று அப்போது அவர்களுக்கு தெரியாமல் போனது விந்தையிலும் விந்தை!

அடுத்து கம்யூனிஸ்டுகளின் கருத்து சுதந்திர லட்சணம்:

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒச்சாயி என்றொரு படம் வந்தது. முக்குலத்தோரின் தெய்வமான ஒச்சாயி என்ற பெயரையே அந்த படத்திற்குத் தலைப்பாக வைத்திருப்பார்கள். ஒச்சாயி என்ற பெயர் தமிழ்ப் பெயரா என்று கேள்வி கேட்டு வரி விலக்கு அளிக்க அரசு தயங்கியது. அப்போது நம்ம காம்ரேட் தா.பாண்டியன் என்ன சொன்னார் தெரியுமா? தமிழ்நாட்டில் ஒச்சாயி என்ற பெயரில் பல்லாயிரக் கணக்காண தாய்மார்கள் வாழ்கின்றார்கள். அவர்களையயெல்லாம் அவமதிக்கிற செயலாக இது இருக்கிறது என்று அறிவித்தார்.

அதாவது அவர் சார்ந்த சாதிக்கு அவர் வக்காலத்து வாங்கலாம். ஆனால் யாரும் திருச்செங்கோட்டுப் பெண்களுக்கு வக்காலத்து வாங்கக் கூடாத- இதுதான் கம்யூனிஸ்ட்காரர்களின் கருத்து சுதந்திரம்.

துரை –குணா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தைச் சார்ந்தவர் . தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு புத்தகத்தை எழுதினார். ஊரார் வரைந்த ஓவியம் என்று அந்தப்புத்தகத்தை குளத்திரான்பட்டு ஊராட்சிமன்றத் தலைவர் தங்கராஜ் எதிர்க்கிறார். அந்த ஊரைச் சேர்ந்த எல்லா தலித்துகளும் மற்ற சமூக மக்களும் இந்த நூலை எதிர்கிறார்கள். இதில் என்ன செய்தி? ஊராட்சி மன்றத் தலைவர் ஒரு தலித். அது ஒரு செய்தியா? இல்லை. அவர் ஒரு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். இதுதான் செய்தி.

அவர் செல்கிறார்: எழுத்தாளர் துரை-குணா தவறான தகவல் தந்திருக்கிறார். அதனால் ஊரில் ஒற்றுமையாக இருக்கிற மக்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் இந்தப் புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்திருக்கிறோம் என்று சொல்கிறார். அதுமட்டும்மல்ல;இந்தப் புத்தகத்துக்கு ஒருவர் அணிந்துரை எழுதியிருக்கிறார். பெயர் சின்னதுரை. அவர் என்ன சொல்கிறார் தெரியுமா? தெரியாமல் அணிந்துரை எழுதிவிட்டார். அதில் கொச்சையாக எழுதி இருப்பவற்றை நீக்கும்படி குணாவிடம் சொல்லியிருக்கிறேன்" என்று கூறுகிறார். அவர் யார் தெரியுமா? இவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவர்.

பெருமாள் முருகனுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட இரண்டு கூட்டங்களில் இந்தப் புத்தகத்தையும் ஆதரித்து பேசினார்கள். ஆனால் அவர்கள் யாரிமே கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் இதை எதிர்க்கிறார்கள் என்று கடைசிவரை சொல்லவேயில்லை. இதையும் ஹிந்துத்துவா ஆட்கள்தான் எதிர்க்கிறார்கள் என்று தொடர்ந்து சொல்லிவருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளங்கோவன் கூட கருத்துச் சுதந்திரம் பற்றி பேசியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியினுடைய கருத்துச் சுதந்திரம் எப்படிப்பட்டது என்பதையும் பார்ப்போம்.

நாடார் பெண்கள் பற்றி சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் மேலாடை அணிவது பற்றிய தகவல் சொல்லப்பட்டது. நாடார்கள் கொந்தளித்தார்கள். அதை நீக்க வேண்டும் என்று அப்போதைய காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் குரல்கொடுத்தார். மத்திய இணை அமைச்சருக்கு தொலைபேசி மூலம் தன்னுடைய கன்னடத்தை தெரிவித்தார். ஏனென்றால் நாடார்களின் மனம் புண்படுகிறது. அதை நாங்களும் வழிமொழிகிறோம். ஆனால் திருச்செங்கோட்டு மக்களுக்கு அந்த உணர்வு இருக்கக் கூடாதா? தாலிவிஷயத்தில் அந்த உணர்வு இருக்கக் கூடாதா?

பெருமாள் முருகன் எழுதியிருக்கிற நாவலை ஏன் எதிர்க்கிறோம்? ஆய்வு என்ற பெயரில் திருச்செங்கோட்டு பெண்களை பச்சையாக தே……..ள் என்று கூறியிருப்பதால்.

பெருமாள் முருகன் எழுதுகிறார்- "வீதிகளிலே சாயங்காலம் முதலே அலையத் தொடங்கிவிட்டான். இறக்கத்துக் கோயிலுக்கு எதிரே இருந்த தே………ள் தெருவில் அன்றைக்குக் கூட்டமே இல்லை. அந்தப் பெண்கள் நன்றாக சிங்காரித்துக் கொண்டு மண்டபங்களில் ஆடப்போனார்கள். இன்னிக்கு நம்மள அவன் பார்க்குறான். எல்லாப் பொம்பளைங்களும் இன்னிக்குத் தே…..ள்தான் என்று அவர்கள் பேசிச் சிரித்துப் போனார்கள்.

ஆனால் உண்மை என்ன? 1929-ல் தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு எல்லா மாவட்டங்களிலும் இது ஒழிக்கப்பட்டது. எல்லா அலுவலங்களுக்கும் அரசானை அனுப்பப்பட்டது. அதன்படி எல்லா தேவதாசி இனாம்களை விடுவித்து அவர்களை கோயில் பணியின் பொறுப்பிலிருந்து விடுவித்தனர் என்று முத்துலட்சுமி ரெட்டி தன் வாழ்க்கை சரிதத்தில் கூறுகிறார்.

இந்த நாவல் 1940-ல் நடப்பதாக தினமலரில் பெருமாள் முருகன் கூறியுள்ளார். அப்படியென்றால் 1940-ல் தேவதாசி முறை இருந்ததா? நீதிக்கட்சி தேவதாசி சட்டத்தை கொண்டு வந்து ஒழித்தது என்று பெருமையடிக்கும் திராவிடர் கழகம் இதற்கு என்ன சொல்லப்போகிறது?

ஏன் இவர் இப்படி எழுதுகிறார்? இதனுடைய பின்னணி என்ன?

இவர் 2013-ல் தமிழ்ப்பதிப்பான தி இந்து வில் சைவ சமயத்தை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் சங்ககாலத் தமிழ் நூல்கள் வெளிவராமல் இருந்ததற்குக் காரணம் சைவ சமயம்தான் என்று எழுதினார். அந்தக் கட்டுரையைப் படித்தால் ஒருவனுக்கு நிச்சயமாக சைவ சமயத்தின்மேல் வெறுப்புதான் உண்டாகும். தமிழுக்கும் சைவத்திற்கும் பிரிக்க முடியாத பிணைப்பு இருக்கிறது என்பது நமக்குத் தெரியும். பல சங்க நூல்கள் சைவ மடங்களில் இருந்துதான் வெளிக்கொண்டுவரப்பட்டவை. உ.வே.சா. வாழ்க்கையைப் படித்தவர்கள் இதை அறியலாம்.ஆனால் இவர் அந்த உண்மைகளை மறைத்து சைவ சமயமே தமிழுக்கு விரோதியாக இருந்தது என்பதை கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆகவே நாம் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். கருத்து சுதந்திரம் –ஊடக சுதந்திரம் பற்றிப் பேசுவதற்கு மேற்சொன்ன அரசியல், சித்தாந்த,ஊடக ஆசாமிகள் ஒருவருக்குக் கூட அதற்கான தார்மிகத்தகுதி சிறிதும் கிடையாது. இவர்கள் அத்தனை பேரும் இரட்டைவேடம் போடும் கபடதாரிகள் மட்டுமே.

நன்றி விஜய பாரதம்
– ம.வெங்கடேசன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...