இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை நெகிழ்ச்சி

ஏழு இஸ்லாமிய நாடுகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு உயரிய விருதை வழங்கியுள்ளது என பாஜக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் தலைவர் அண்ணாமலை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு சார்பில் (மார்ச் 25) நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர். இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலானை
முன்னிட்டு பாஜக சார்பில் ஆண்டுதோறும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சென்னை எழும்பூரில் நேற்று (மார்ச் 25) பாஜக சிறுபான்மை பிரிவு சார்பில் தலைவர் அண்ணாமலை தலைமையில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரின் அன்பையும் ஏற்றுக்கொண்டு உங்களோடு கலந்து இன்று நாங்களும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்வில் பங்கேற்பது ஆண்டவன் கொடுத்த பெரிய வரபிரசாதமாக நாங்கள் கருதுகிறோம்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனைத்து இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மிகமுக்கியமாக பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் பேசுவதை விட நம்முடைய கட்சி சார்பாக முன்னாள் ஆளுநர், மாநிலத் தலைவர் அக்கா தமிழிசை சௌந்தராஜன் அவர்கள் மிகச்சிறப்பாக பேசியிருக்கிறார். எனவே நாங்கள் தனித்தனியாக பேசுவதை விட கூட்டணிக் கட்சித் தலைவர்கள்
பேசுவதை பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.

எல்லா கட்சிகளிலும் சிறுபான்மை தொண்டர்கள், தலைவர்கள் இருக்கிறார்கள். சிறுபான்மை மக்களுக்காக மேடையில் இருக்கக்கூடிய எல்லாத் தலைவர்களும் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சியும், மேடையில் இருக்கக்கூடிய நமது அன்புத் தலைவர்களும் நாங்கள் சிறுபான்மை மக்களுக்கு என்ன செய்தோம் என்பதை ஆதாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் சிறுபான்மை மக்களுக்கு எதிரி என்று நம்மை சொல்லக்கூடிய திமுகவிடம் இரண்டு கேள்வியை கேட்டுப்பாருங்கள். உதாரணத்திற்கு சிறுபான்மை மக்கள் அதிகமாக வாழக்கூடிய மாவட்டத்தில் பாரதப்பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 31 சதவீத வீடுகள் சிறுபான்மை மக்களுக்கு
சென்று சேர்ந்துள்ளது. இவை எல்லாம் ஆதாரங்களின் அடிப்படையில் நாம் சொல்ல முடியும். இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் மட்டும் தான் முதல்வர் ஸ்டாலின் உங்கள் அருகில் அமர்ந்து சிறுபான்மை மக்களுக்கு பாதுகாவலனாக பேசுவார். மற்றபடி நான்கு ஆண்டுகாலம் திமுக ஆட்சியில் எந்தவிதமான விஷயமும் இருக்காது. அதே போன்று பாரதப் பிரதமரின் முத்ரா கடன் வழங்கும் திட்டத்தில் 38 லட்சம் கோடி ரூபாய் மக்களுக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளது. அதில் 36 சதவீதம் சிறுபான்மை மக்கள் பயனடைந்துள்ளனர்.

பிரதமரின் விவசாய க ௌரவ திட்டத்தில் 33 சதவீதம், உஜ்வாலா திட்டத்தில் 37 சதவீதம் சிறுபான்மை மக்கள் பயனடைந்துள்ளனர். பாரதப் பிரதமராக நரேந்திர மோடி வந்த பிறகு இஸ்லாமிய பெண் குழந்தைகள் படிப்பதற்காக அவர்களை ஊக்குவிக்கும் வகையில் 51 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இது போன்று நிறைய திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஐயா மற்றும் தேசிய ஜனநாயக் கூட்டணி தலைவர்கள் யாரேனும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக இருந்திருக்கோமா என்பதை நீங்கள் வீட்டுக்கு சென்று ஒரு பத்து நிமிடம் யோசிச்சு பாருங்கள். வேறு ஒன்றும் எனக்கு வேண்டாம். நாங்கள் எங்களது தலைவர்களை புகழ்ந்து பேசுவதை தாண்டி உங்களது மனதை திறந்து பாருங்கள். இந்த 11 ஆண்டுகால ஆட்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் யாரேனும் தவறு செய்திருக்கிறோமா என்று. இன்று 20 நாடுகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு உயர்ந்த விருதை வழங்கியுள்ளது. அதில் 7 இஸ்லாமிய நாடுகள் தன்னுடைய உயர்ந்த விருதை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வழங்கியுள்ளனர். இது எத்தனை பேருக்கு தெரியும்.

சவுதி அரேபிய அரசு சார்பில் முஸ்லிம் அல்லாத தலைவர்களுக்கு அந்த நாட்டின் உயரிய கவுரவமான ‘ஆர்டர் ஆஃப் அப்துல் அஜீஸ் அல் சவுத்’ விருது வழங்கப்படுகிறது. 2016-ல் இந்த விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. 2016-ல் ஆப்கானிஸ்தானின் மிக உயரிய ‘ஸ்டேட் ஆர்டர் ஆப்காஜி அமீர் அமானுல்லா கான்’விருது வழங்கப்பட்டது. 2018-ல் பாலஸ்தீனம் சார்பில் வெளிநாட்டு பிரமுகர்களுக்கான உயரிய விருதான ‘கிராண்ட் காலர் ஆப்
தி ஸ்டேட் ஆப் பாலஸ்தீன விருது’ அளிக்கப்பட்டது.

2019-ல் மாலத்தீவு அரசு சார்பில் ‘ஆர்டர் ஆப் தி டிஸ்டிங்கிஸ்ட் ரூல் ஆப் நிஷான் இசுதின்’ விருது வழங்கப்பட்டது. கடந்த 2019-ல் ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் சயீத் விருது’ பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. கடந்த 2019 -ம் ஆண்டில் பஹ்ரைன் அரசு சார்பில் ‘கிங் ஹமாத் ஆர்டர் ஆப் தி ரினைசன்ஸ்’ விருது அளிக்கப்பட்டது. கடந்த 2023-ம் ஆண்டில் எகிப்து நாட்டின் மிக உயரியவிருதான “ஆர்டர் ஆப் திநைல்” விருது வழங்கப்பட்டது.

2024-ல் குவைத் அரசு சார்பில் ‘தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்’ விருதுவழங்கப்பட்டது. 2020 -ல் அமெரிக்க அரசு சார்பில் லெஜியன் ஆப் மெரிட்’
விருது வழங்கப்பட்டது. கடந்த 2023-ம் ஆண்டில் பிஜி நாட்டின் உயரிய விருதான ‘கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் பிஜி’ வழங்கப்பட்டது. கடந்த 2023ம் ஆண்டில் தீவு நாடான பப்புவா நியூ கினியா சார்பில் ‘கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் லோகோஹு’ விருது வழங்கப்பட்டது. 2023-ல் பிரான்ஸ் அரசு சார்பில் ‘லெஜியன் ஆப் ஹானர்’ விருது வழங்கப்பட்டது. கடந்த 2023-ம் ஆண்டில் கிரீஸ் அரசு சார்பில் ‘கிரான்ட் கிராஸ் ஆப் திஆர்டர் ஆப் ஹானர்’ விருது வழங்கப்பட்டது.

கடந்த 2023-ம் ஆண்டில் பலாவ் நாட்டின் சார்பில் ‘பலாவ் குடியரசு எபகல் விருது’ வழங்கப்பட்டது. 2024-ல் பூடான் சார்பில் ‘ஆர்டர் ஆப் தி டியூக் காலப்’ விருது வழங்கப்பட்டது. 2024-ம் ஆண்டில் ரஷ்யாவின் மிக உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ’ விருதுஅளிக்கப்பட்டது. 2024-ம் ஆண்டில் நைஜீரியா அரசு சார்பில் ‘ஆர்டர் ஆப் நைஜர்’ விருது வழங்கப்பட்டது. 2024-ம் ஆண்டில் டொமினிகோ சார்பில் ‘டொமினிகோ அவார்ட் ஆப் ஹானர்’ விருது வழங்கப்பட்டது. 2024-ல் கயானா சார்பில் ‘ஆர்டர் ஆப் எக்சலன்ஸ் கயானா’ விருது வழங்கப்பட்டது. 2024-ல் பார்படோஸ் சார்பில் ‘ஆர்டர் ஆப் பிரீடம்ஆப் பார்படோஸ்’ விருது வழங்கப்பட்டது.

அனைத்து இஸ்லாமிய நாடுகளும்பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு சிவப்புகம்பளம் வரவேற்பு கொடுத்து வருகிறது. ஆனால் இங்கு மேப்பில் எங்கு மணிப்பூர் இருக்கிறது என்றே தெரியாது. தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு இந்திய வரைப்படத்தை கொடுத்து மணிப்பூர் எங்கு இருக்கிறது என்று தொட்டு காண்பித்தார் என்றால் நான் அரசியலே விட்டே போய்விடுகிறேன். அவருக்கு மணிப்பூர் எங்கு இருக்கிறது என்றே தெரியாது. மணிப்பூரில் நடைபெறுவதற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக காரணமாம். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மணிப்பூரில்உள்ள பெண்கள் ஸ்பெஷல் பவர் சட்டத்திற்கு எதிராக ஆடைகள் இன்றி சாலைகளில் போராட்டம் நடத்தினார்கள். அந்த மணிப்பூர் கொஞ்சம், கொஞ்சமாக அமைதி திரும்பி வந்துக்கொண்டிருக்கும்போது இரண்டு சமுதாயத்திற்கு எதிராக நடைபெற்று வரும் பிரச்சனைக்காக இன்றைக்கு மாநில அரசு ராஜினாமா செய்தது. தற்போது ஆளுநர் ஆட்சியால் மீண்டும் அமைதி திரும்பி வருகிறது. எங்கு பிரச்சனை நடந்தாலும் அதற்கு பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி மீது பழியை போடுவது மட்டுமே முதல்வர் ஸ்டாலினின் வேலையாக வைத்திருக்கிறார். அதனால் நான் அதிகம் பேசுவதை விட எனதருமை இஸ்லாமிய சொந்தங்களுக்கு அன்பான வேண்டுகோள். ஒரு பத்து நிமிடம் நாங்கள் எங்கேயாவது தவறு
செய்திருக்கின்றோமா யோசிச்சு பாருங்கள். இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில்கூறியிருப்பதாவது:

தமிழக பாஜக சிறுபான்மையினர் அணி சார்பாக நடைபெற்ற, புனித ரமலான் இஃப்தார் நோன்பு திறப்பு விழா, வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவில், தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள், முன்னாள் தமிழக முதலமைச்சர், அண்ணன் ஓ. பன்னீர் செல்வம், முன்னாள் தமிழக அமைச்சர் அண்ணன் வைத்தியலிங்கம், அதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் டிடிவி தினகரன், பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அண்ணன் பாலு, தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் சார்பாகக் கலந்து கொண்ட, பொதுச்செயலாளர் ஐயா முனவர் பாஷா, மாநிலத் துணைத் தலைவர் அண்ணன் விடியல் சேகர், புதிய நீதிக் கட்சியின் தலைவர், ஐயா ஏ.சி. சண்முகம், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் அண்ணன் ரவி பச்சமுத்து, தமமுக தலைவர் அண்ணன் ஜான் பாண்டியன், தென்னிந்திய பார்வர்டு ப்ளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் அண்ணன் திருமாறன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் ரவிந்திரநாத் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டில், பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர், பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில், 31% சிறுபான்மையின மக்கள் வீடு கிடைக்கப்பெற்றுள்ளனர். முத்ரா கடனுதவித் திட்டத்தில் 36% சிறுபான்மையினமக்கள் பயனடைந்துள்ளனர்.விவசாயிகள் க ௌரவ நிதி பெற்றவர்களில் 33% சிறுபான்மையினர். உஜ்வாலா திட்டத்தில் பயனடைந்தவர்களில் 37% சிறுபான்மையினர். மேலும், சிறுபான்மையின பெண்குழந்தைகள் பள்ளிக் கல்வி முடித்ததும், ரூ. 51,000 நிதி உதவி, நமது பாரதப் பிரதமர் ஆட்சியில் வழங்கப்படுகிறது. ஆனால், திமுக சிறுபான்மையின மக்களுக்காகக் கொண்டு வந்த திட்டங்கள் என்ன? விழாவில, தமிழக பாஜக சார்பாக, முன்னாள் மாநிலத் தலைவர் அக்கா தமிழிசை சௌந்தரராஜன், மாநிலத் துணைத்தலைவர் அண்ணன் கரு நாகராஜன், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலத் தலைவர் சகோதரர் அமர் பிரசாத் ரெட்டி, தேசிய சிறுபான்மையினர் அணிச் செயலாளர் அண்ணன் சையத் இப்ராஹிம், சிறுபான்மையினர் அணி மாநிலத் தலைவர் அக்கா திருமதி டைசி தங்கையா, மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஏ.என்.எஸ்.பிரசாத், மற்றும்தமிழக பாஜக நிர்வாகிகள், சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ்வாறு தலைவர்அண்ணாமலை கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமித்ஷா வருகைக்கான காரணம் நாளை ...

அமித்ஷா வருகைக்கான காரணம் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் – அண்ணாமலை ''மாநில தலைவர் தேர்தலுக்கும், அமித்ஷா வருகைக்கும் தொடர்பில்லை. வருகைக்கான ...

வெலிங்டன் போர் நினைவு சதுக்கத்� ...

வெலிங்டன் போர் நினைவு சதுக்கத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வருகை தந்த ...

பாம்பன் பாலத்தை குறைத்து மதிப்� ...

பாம்பன் பாலத்தை குறைத்து மதிப்பிடவேண்டாம் – அமைச்சருக்கு வானதி சீனிவாசன் அறிவுரை ''இந்திய பொறியாளர்களால் கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலத்தை, குறைத்து ...

குமரி அனந்தனுக்கு அரசு மரியாதை� ...

குமரி அனந்தனுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு, ...

தமிழகம், பீகார் சட்டசபை தேர்தலி ...

தமிழகம், பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவோம் : அமித்ஷா ''தமிழகம், பீஹார் சட்டசபை தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம். ...

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் இந்த� ...

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் இந்தியா நிரந்தர உறுப்பினராக முழு ஆதரவு ஆதரவு; ஸ்லோவாக்கியா அதிபர் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு முழு ...

மருத்துவ செய்திகள்

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...