இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக.,வுடன் கூட்டணி அமைக்க ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம்மஞ்சி திட்டமிட்டுள்ளார். பாஜ தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டெல்லியில் அவர் முகாமிட்டுள்ளார்.
கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்னர்வரை பீகாரில் பாஜ மற்றும் ஐக்கிய ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. மோடியை பிரதமர் வேட்பாளராக பாஜ அறிவித்தவுடன் பாஜ கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தள தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் விலகினார். இதன்பின்னர் நடை பெற்ற லோக்சபா தேர்தலில் ஐ.ஜ.தளம் படுதோல்வி அடைந்தது. இதற்கு பொறுப்பு ஏற்று முதல்வர் பதவியிலிருந்து நிதிஷ் விலகினார். தனது நெருங்கிய கூட்டாளியும் தலித்தலைவருமான ஜித்தன் ராம் மஞ்சியை பீகார் முதல்வராக்கினார்.
மஞ்சியின் செயல்பாடுகள் இதர தலைவர்களுக்கு எரிச்சலை மூட்டியது. இந்நிலையில் பீகாரில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு மீண்டும் முதல்வராக நிதிஷ் திட்டமிட்டார். இதற்கு மஞ்சி ஒத்துழைப்பு அளிக்க வில்லை. இதைதொடர்ந்து ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து மஞ்சி நீக்கப் பட்டார். சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்பு முதல்வர் பதவியை மஞ்சி ராஜினாமா செய்தார். இதைதொடர்ந்து நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்று கொண்டார். இந்நிலையில் வரவிருக்கும் சட்ட மன்ற தேர்தலை கூட்டாக சந்திக்க எதிரும் புதிருமாக இருந்த லாலுவும், நிதிஷும் முடிவுசெய்துள்ளனர். இவர்களுக்கு இடையே தொகுதிபங்கீடு பேச்சு வார்த்தையும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. முதல்வராக நிதிஷ் குமாரை அறிவிப்பதில் கருத்தொற்றுமை இன்னும் ஏற்படவில்லை.
இதற்கிடையில் மஞ்சியை கூட்டணிக்கு அழைத்து வர லாலு முயற்சித்தார். இதனை நிதிஷ் ஏற்றுக் கொள்ள வில்லை. பீகாரில் பாஜவுடன் லோக் ஜனசக்தி கூட்டணியில் உள்ளது. இக்கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மத்திய அமைச்சராக உள்ளார். தற்போது மஞ்சியையும் பாஜக கூட்டணியில் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூட்டணியில் புதியகட்சிகள் சேர்க்கப்படும் என பாஜ தலைவர் அமித்ஷா சில தினங்களுக்கு முன்பு பாட்னாவில் பேட்டியளித்தார். இதைதொடர்ந்து பாஜவுடன் கூட்டணி அமைப்பது குறித்து மேலிட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மஞ்சி டெல்லி சென்றுள்ளார். அவர் இன்று பிரதமர் மோடியை சந்தித்து கூட்டணி குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
Leave a Reply
You must be logged in to post a comment.