லலித் மோடிக்கு விசாபெற உதவிய விவகாரத்தில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மாஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே அகியோர் பதவி வில வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிர்க் கட்சியினர் வலியுறுத்தியபோது, அதற்கு வாய்ப்பேயில்லை என மத்திய அரசு மறுத்துவிட்டது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
அப்போது பிரதமர் கூட்டத்தை சுமுகமாக நடத்தவிரும்புகிறேன். எல்லா பிரச்சினை களையும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது என்றார். தொடர்ந்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், "பிரதமர் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த விரும்பினார் என்றால் சுஷ்மா ஸ்வராஜையும், வசுந்தரா ராஜேவையும் அவர் பதவிநீக்கம் செய்ய வேண்டும்" என்றார்.
இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறும்போது, "அரசை யாரும் நிர்பந்திக்க முடியாது. ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை. யாரையும் நீக்கச்சொல்லி அரசை எவரும் உத்தரவிடமுடியாது. மத்திய அரசைப் பொருத்தவரை அமைச்சரவையில் உள்ள எந்தஒரு அமைச்சரும் தவறிழைக்கவில்லை" என்றார்.
நிலச்சட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப் படாததால் அரசு தரப்பிலும் சில விஷயங்களில் சமரசம்செய்ய வேண்டும் என ராம் கோபால் யாதவ் தெரிவித்ததை தான் ஏற்றுக் கொள்வதாக பிரதமர் மோடி கூறினார்.
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.