ஜெக்தீப் தன்கர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அனுமதிக்க முடியாது – கிரண் ரஜிஜு

மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அனுமதிக்க முடியாது என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது முதலே அதானி விவகாரம் உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதை அரசு ஏற்க மறுப்பதால் இரு அவைகளும் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் அடங்கிய இண்டியா கூட்டணி உறுப்பினர்கள் அவையின் செயலாளரிடம் நேற்று முன்தினம் நோட்டீஸ் வழங்கினார். சுமார் 70 எம்.பி.க்கள் கையெழுத்திட்டிருந்த அதில், “அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது அடிக்கடி குறுக்கிடுகிறார். முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்த அனுமதி கொடுக்க மறுக்கிறார். நாடாளுமன்ற விதிகளை மீறுகிறார்” என கூறப்பட்டுள்ளது.

இந்த சூழலில் நேற்று காலையில் மாநிலங்களவை கூடியதும், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியதாவது: அவைத் தலைவருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார்கள். அவைத் தலைவரின் கண்ணியத்தின் மீது தாக்குதல் நடத்தினால் அவரை நாங்கள் பாதுகாப்போம். அவைத் தலைவரை மதிக்காவிட்டால் உறுப்பினராக இருப்பதற்கு உங்களுக்கு (எதிர்க்கட்சி எம்.பி.க்கள்) உரிமை இல்லை. நாம் பதவியேற்கும்போது நாட்டின் இறையாண்மையை பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்துள்ளோம். ஆனால் நாட்டுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு ஆதரவாக நீங்கள் செயல்படுகிறீர்கள். இவரைப் போன்ற தலைவர் கிடைப்பது கடினம். ஏழைகளின் நலன் மற்றும் அரசியலமைப்பை பாதுகாப்பது குறித்து அவர் அடிக்கடி பேசுவார். நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் என்ற நாடகத்தை அனுமதிக்க முடியாது. ஜார்ஜ் சோரஸுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே எத்தகைய உறவு உள்ளது என்பது பற்றி தெரிவிக்க வேண்டும். நாட்டு மக்களிடம் காங்கிரஸ் மன்னிப்பு கோர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...