தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடக மாநிலம் அணைகட்ட முடியாது

காவிரி ஆற்றின்குறுக்கே மேக்கே தாட்டு பகுதியில் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடக மாநிலம் அணைகட்ட முடியாது என்பதை மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மீண்டும் உறுதியளித்துள்ளதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தில்லியில் புதன்கிழமை தெரிவித்தார்.

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் 13 கட்சிகள் அடங்கிய தமிழ்நாடு சட்டப் பேரவை அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் குழு மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை தில்லியில் உள்ள புதன்கிழமை சந்தித்து மனு அளித்தது.

இந்தக் குழுவில் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன் (திமுக), நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைகோ (மதிமுக), தம்பிதுரை (அதிமுக) மற்றும் ஜி.கே.மணி (பாமக), சட்டப் பேரவை பாஜக தலைவர்  நயினார் நாகேந்திரன் , வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), தி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூ), பி.சண்முகம் (மார்க்சிஸ்ட்), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), ஏ.கே.பி. சின்ராஜ் (கொங்கு நாடு மக்கள் கட்சி), எம். ஜகன்மூர்த்தி (புரட்சி பாரதம்) உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

இதைத்தொடர்ந்து, அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கே தாட்டுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது. மேக்கேதாட்டு விவகாரத்தை காவிரி நீர்மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி தமிழக அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின்குழு சார்பில் மத்திய அமைச்சரை சந்தித்து மனு அளித்தோம். மத்திய அமைச்சருடனான பேச்சு சுமுகமாக இருந்தது. மேக்கேதாட்டு அணைவிவகாரம் குறித்து பேசுவதற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு எந்தவித அதிகாரவரம்பும் இல்லை என்பதை மத்திய அமைச்சரிடம் விளக்கினோம்.

ஆனால், ஆணையத்துக்கு உரிமையும், அதிகார வரம்பும் உண்டு என தங்களுடைய வழக்குரைஞர் கருத்து அளித்துள்ளாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். இந்த அதிகாரவரம்பு விவகாரம் குறித்து தமிழகம் சார்பிலும் சட்ட வல்லுநர்களின் கருத்தைக்கேட்டு அளிக்கிறோம் என்று மத்திய அமைச்சரிடம் தெரிவித்தோம். இந்த விவகாரம் குறித்து அடுத்த கூட்டத்தில் விவாதித்து முடிவுகாணலாம் என மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகம் காவிரியில் எந்த அணையையும் கட்டமுடியாது என்பதை மீண்டும் மத்திய அமைச்சர் தமிழக அரசியல் கட்சிகளிடம் உறுதியளித்துள்ளார். இந்தவிவகாரம் குறித்து ஆணையக் கூட்டத்தில் விவாதித்தால் தமிழகம் எதிர்த்துவாதிடும். ஆணையத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் தமிழகத்தின் கருத்துக்கு ஆதரவாக உள்ளனர் என்பதையும் மத்திய அமைச்சரிடம் எடுத்துரைத்தோம் என்றார் துரைமுருகன்.

முன்னதாக, தமிழக அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அந்தக் குழுவினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், தமிழ்நாடு இல்ல தலைமை உள்ளுறை ஆணையர் அதுல்ய மிஸ்ரா, தமிழக அரசின் நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில் நுட்பக் குழுவின் தலைவர் ஆர். சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

கடந்த ஓராண்டுக்கு (2021 ஜூலை 6) முன்பு இதேமேக்கேதாட்டு அணை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக அனைத்துக் கட்சி குழு தில்லி வந்து மத்திய அமைச்சரை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. காவிரி நீர்மேலாண்மை ஆணையக் கூட்டம் வரும் ஜூலை 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, காவிரி மேலாண்மை ஆணையத்தினர் கடந்த ஜூன் 17-ஆம் தேதி மேட்டூர் அணை உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜே ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜேபி நட்டாவையும் சந்நதித்த பழனிசாமி 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான ...

அ. தி மு க , பாஜக கூட்டணி – விளக் ...

அ. தி மு க ,  பாஜக கூட்டணி – விளக்கமளித்த பழனிசாமி அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு அதிமுக ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிர ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 6 ல் திறந்து வைக்கிறார் பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6ம் ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை க ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை கைவிடும் இயக்கங்கள் ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல்இயக்கம் பிரிவினை வாதத்துடனான அனைத்து ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்க ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்கும் கூடுதலாக 25 ஆயிரம் டவர்கள் மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை ...

மருத்துவ செய்திகள்

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...