அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் பிற அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்ட போதிலும் கடந்த 2006 சட்ட பேரவை தேர்தலில்லிருந்து அதிமுக. அணியில் இடம் பெற்றுவரும் கட்சியான மதிமுக.வுக்கு இதுவரை எந்த தொகுதிகளும் ஒதுக்கப்படவில்லை. மதிமுக தரப்பில் 23 தொகுதிகள் வரை எதிர்பார்ப்பதாக தெரிகிறது, ஆனால் 10 தொகுதிகள் மட்டுமே அ.தி.மு.க தரப்பில் தர தயாராக இருப்பதாக தெரிகிறது, அ.தி.மு.க.வின் இந்த அணுகு முறையால் மதிமுக.வினர் அதிர்ச்சியில் உள்ளனர் .
இந்நிலையில் மார்ச் 19ம் தேதி சனிக்கிழமை மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக் குழு, ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆய்வுமைய உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று மதிமுக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது
வைகோ ஒரு மிக சிறந்த அறிவாளி.. தனது கல்லூரி படிப்பின்போது தங்கபதக்கம் வாங்கியவர்.. இளையராஜாவின் திருவாசகம் பாராட்டு விழாவில் வைகோ பேசியது அவரது அறிவு ஆழத்தை காட்டும். அப்படிப்பட்ட மனிதரை இந்தஅரசியல் நிராகரித்தால் அது தமிழ்நாட்டிற்கு ஒரு பேரிழப்பாக அமையும்
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.