பாஜகவில் ஒன்மேன் ஷோ கிடையாது. இது தொண்டர்களால் ஆனகட்சி. ஆட்சி மன்றக் குழு எடுக்கும் முடிவுக்கு எல்லா தொண்டர்களும் கட்டுப் படுவார்கள். அதே நேரத்தில் பாஜக பார்லிமெண்ட் போர்டில் இருக்கும் தலைவர்கள் எடுக்கும்முடிவு இந்தக் கட்சியை வலுப்படுத்தக் கூடியதாகத்தான் இருக்கும் என்று தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை கூறினார்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “பாஜக தேசிய கட்சி, அந்தகட்சி யாருடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்பதை அந்த கட்சியின் தேசிய தலைவர்களே முடிவு செய்வார்கள். மாநிலத்தில் உள்ளவர்கள் அல்ல. அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்வதாக டெல்லியில் உள்ள தலைவர்களே கூறியுள்ளனர்” என்றார்.
தமிழகத்தில் அதிமுக உடனான கூட்டணியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விரும்பவில்லை என்று பரவலாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்தபேச்சு அண்ணாமலைக்கு பதில் கொடுக்கும் விதமாகவே இருந்ததாக அரசியல் நோக்கர்கள் கூறினர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜகவை பொறுத்தவரை ஆட்சி மன்றக்குழுதான் முடிவுசெய்கிறது. ஆட்சிமன்றக் குழுவில் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தொண்டர்களுக்கு மதிப்புகொடுத்து கேட்டுவிட்டு முடிவு செய்வார்கள்” என்று சூடாக பதில் கொடுத்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதவை மீண்டும் சட்ட சபையில் இருந்து அனுப்பி இருக்கிறார்கள். இனி ஆளுநர் திரும்பிஅனுப்ப வாய்ப்பு இல்லை. கையெழுத்து போடத்தான்போகிறார். ஏனெனில் அதுதான் அரசியல் அமைப்பு சட்டம். ஆனால் ஒரேபயம் ஒரு முறையற்ற மசோதா பாலிட்டி மசோதா மீண்டும் கோர்ட்டிற்கு போய் தடையாகி மறுபடும் பிரச்சினை ஆகத்தான் போகிறது. ஆளுநரை பொறுத்தவரை கையெழுத்துபோட வேண்டிய நிர்பந்தம் மட்டும் இல்லை. கட்டாயமும் இருக்கிறது அதுதான் அரசியல் அமைப்பு சட்டம்.
“டெல்லி தலைமையாக இருந்தாலும் யாராக இருந்தாலும் பாஜக என்பது தொண்டர்களின்கட்சி. மற்ற கட்சிபோல ஒரு தலைவர் வந்து 50 வருஷம் 60 வருஷம், 70 வருஷம் என்று இருப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. பாஜகவை பொறுத்தவரை ஆட்சி மன்றக்குழுதான் முடிவு செய்கிறது. ஆட்சிமன்றக் குழுவில் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தொண்டர்களுக்கு மதிப்புகொடுத்து கேட்டுவிட்டு முடிவு செய்வார்கள்.
இந்தக் கட்சியில் ஒன்மேன்ஷோ கிடையாது. இது தொண்டர்களால் ஆன கட்சி. ஆட்சி மன்றக் குழு எடுக்கும்முடிவுக்கு எல்லா தொண்டர்களும் கட்டுப்படுவார்கள். அதேநேரத்தில் பாஜக பார்லிமெண்ட் போர்டில் இருக்கும் தலைவர்கள் எடுக்கும் முடிவு இந்தக்கட்சியை வலுப்படுத்தக் கூடியதாகத் தான் இருக்கும். என்னை பொறுத்த வரை மாநில தலைவர் என்ற முறையில் எதுவாக இருந்தாலும் பாஜக வலிமை பெறவேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |