எந்த ஒரு ஆற்றலுமே உந்துசக்தி தீர்ந்தவுடன் ஆற்றலும் போய்விடும் உதாரணத்திற்கு மனிதன் எதன் மூலம் ஆற்றல் பெருகிறான் உணவின் மூலம் ஆற்றல் பெருகிறான். உணவே இல்லையென்றால் அவன் அவனது ஆற்றலை எல்லாம் இழந்து சோர்ந்து போய்விடுவான்.
திருமூலரின் வாக்கு:
——————————
அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு
அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே. – திருமந்திரம்-2008
பொருள்:
————-
அணுவுக்கும் அணுவான அடிப்படைத் துகள்களை (ப்ரோட்டான் => குவார்க் => க்ளுவான்) ஆயிரம் துண்டாக்கி, அதில் ஒரு துண்டுக்குள், நுண்ணியதாக உள்ள பரமாணு நெருங்க கூடியவர்களுக்கு; பரம்பொருளை அடைதலும் கைகூடும்.
இதைத்தான் இன்றைக்கு கடவுள் துகள்கள் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அது சரி இதில் எங்கே சூரியன் ஓயாமல் எரியும் தத்துவம் கூறப்பட்டுள்ளது?
சூரியனில் நடக்கு தொடர் அணுப் பிளவுகள் (Chain Nuclear Reaction in Sun):
————————————————————————–
எல்லா ஆற்றலுமே ஒரு காலகட்டத்தில் வத்திப் போகும் ஒன்றுதான். ஆனால் சூரியன் மட்டும் எப்படி ஓயாமல் தகித்துக் கொண்டிருக்கிறது? அதற்கான காரணம் சூரியனில் அணு உடைவதும் பின்பு ஒன்று சேர்தலுமாக தொடர்ச்சியாக நிகழ்வதுதான். இவ்வாறாக பல கோடி கோடி அணுக்கள் உடைவதும் சேர்வதுமாக இருக்கிறது. ஒவ்வொரு முறை அணு உடையும்போதும், சேரும்போதும் நெருப்பு உண்டாகிறது. அதுவே நெருப்பு கோலமாக காட்சியளிக்கிறது. இவ்வாறுதான் ஒவ்வொரு அணு உலைகளும் செயல்படுகிறது.
———————————————————————————
இப்போது புரிகிறதா? சூரியனின் தொடர்ச்சியான செயல்பாடுகளுக்கும் திருமூலரின் கூற்றிர்கும் உள்ள சம்பந்தம். 20ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு செயலை பல நூற்றாண்டிற்கு முன்னர் வாழ்ந்த திருமூலரால் எப்படி கூற முடிந்தது? மெய்ஞானமா? விஞ்ஞானமா?
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.