நான் மனிதன் தான்; கடவுள் இல்லை – பிரதமர் மோடி

“தவறுகள் நடப்பது இயல்பு தான். எல்லாரும் தவறு செய்வர். நானும் செய்துள்ளேன். நான் என்ன கடவுளா? சாதாரண மனிதன் தானே,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

‘ஆன்லைன்’ வாயிலாக கேட்கப்படும் ஒலி தொடர்கள், ‘பாட்காஸ்ட்’ என்று அழைக்கப்படுகின்றன. பிரபலங்களில் துவங்கி, சாமானியர் வரை பலரும் தங்களுக்கென்று தனியாக பாட்காஸ்ட் துவக்கி பல்வேறு கருத்துக்களை பகிர்கின்றனர்.

அந்த வகையில், பங்கு வர்த்தகம் மற்றும் நிதி சேவைகள் துறையில் முன்னணி வகிக்கும், ‘ஜீரோதா’ நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான நிகில் காமத் நடத்தி வரும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி முதல்முறையாக பங்கேற்று பேசினார்.

வழக்கத்துக்கு மாறாக, அரசியல் அதிகம் இல்லாமல் தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பிரதமர் மனம் திறந்துள்ளார்.

ஆரம்ப பள்ளியில் படிக்கும் போது, என் வீட்டில் இருப்பவர்களின் துணிகளை நான் தான் துவைப்பேன். அப்போது தான் குளத்துக்கு செல்ல அனுமதி கிடைக்கும். அங்கு ஆனந்தமாக நீச்சல்அடிப்பேன்

அரசியல்வாதியாக இருப்பது வேறு, வெற்றிகரமான அரசியல்வாதியாக இருப்பது வேறு. ‘நான் எல்லாருக்கும் மேலானவன், நான் சொல்வதை அனைவரும் பின்பற்றுவர்’ என்ற நினைப்பு இருப்பவர் அரசியலில் இருக்கலாம்.

ஆனால், வெற்றிகரமாக இருக்க முடியுமா என்பது தெரியாது. மக்களுடன் மக்களாக இருப்பவரே அரசியலில் வெற்றி பெற முடியும்

சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் அரசியல்வாதி ஆகவில்லை. சிலர் மட்டுமே அரசியலுக்கு வந்து சாதித்தனர். அரசியலுக்கு வர குறிக்கோள் மட்டும் இருந்தால் போதாது, தெளிவான திட்டம் வேண்டும்

கடந்த 2002, என் வாழ்நாளில் மிக கடுமையான நாட்கள். கோத்ரா கலவரம் வெடித்தபோது நான் எம்.எல்.ஏ.,வாக பொறுப்பேற்று மூன்று நாட்கள் மட்டுமே ஆகியிருந்தன.

கோத்ராவுக்கு செல்ல முயற்சித்தேன். ஒற்றை இன்ஜின் ஹெலிகாப்டர் மட்டுமே அங்கு இருந்தது. அதில், வி.ஐ.பி.,யை அழைத்து செல்ல மறுத்துவிட்டனர். நான் வி.ஐ.பி., இல்லை என அவர்களுடன் சண்டையிட்டு, கோத்ரா சென்றடைந்தேன்

தேர்தலில் போட்டியிடுவது, அதிகாரத்தை பிடிப்பது மட்டுமே அரசியல் அல்ல; அது ஒரு அம்சம் மட்டுமே.

ஒருவர் கொள்கை வகுப்பதில் ஈடுபட்டால் உண்மையான மாற்றத்தை கொண்டு வர முடியும். அரசியல் தொடர்புடைய கொள்கை வகுப்பாளராக இருந்தால் நாடு முழுதும் மாற்றத்தை கொண்டு வர முடியும்

தேர்தலில் போட்டியிட பணம் முக்கியமில்லை. என் சிறு வயதில், கண் மருத்துவர் ஒருவர், மக்களிடம் இருந்து ஆளுக்கு 1 ரூபாய் நன்கொடை பெற்று தேர்தலில் போட்டியிட்டதை பார்த்துள்ளேன்

கடந்த 2005ல், நான் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது எனக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டது. இந்திய விசாவுக்காக பலரும் வரிசையில் நிற்கும் நாள் வரும் என, நான் அப்போது கூறினேன். இன்றைக்கு இந்தியாவின் நேரம் துவங்கிவிட்டது

தவறு செய்வது மனித இயல்பு. நானும் தவறுகள் செய்திருக்கிறேன். தவறு செய்யாதிருக்க நான் ஒன்றும் கடவுள் அல்ல; மனிதன் தானே. ஆனால் என் தவறுகளுக்கு பின்னால் கெட்ட நோக்கம் இருக்காது.

இவ்வாறு பிரதமர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல  வெட்​கப்​ படு​கிறீர்​களா ? பிஹாரின் தேர்​தல் பிரச்​சார சுவரொட்​டிகளில் இந்த மாநிலத்​தில் காட்​டாட்​சிக்கு ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்க ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற முயற்சிக்கிறோம் பீஹார்தேர்தலில் ஓட்டுக்களை பெறுவதற்காக, காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் என்னை ...

மருத்துவ செய்திகள்

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...